1964ல் ஒலிம்பிக் போட்டி கள் ஜப்பான் தலைநகர் டோக்கி யோவில் நடைபெற்றது. ஆசியக் கண்டத்தில் முதன்முதலாக நடத்தப் பட்ட ஒலிம்பிக் இது. முதல் தடவை யாக ஐரோப்பிய, அமெரிக்கக் கண் டங்களுக்கு அப்பால் நடத்தப்பட்ட ஒலிம்பிக் இது.
இதற்குப்பின் தென்கொரியத் தலைநகர் சீயோல், சீனத்தலை நகர் பெய்ஜிங்கிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன.டோக்கியோ ஒலிம்பிக்கில் இந் தியா மீண்டும் தனது ஹாக்கி வலி மையை நிரூபித்தது. இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளர் ஹபூல் முகர்ஜி தனது ஆட்டத்தின் உச்சியில் இருந்த போது வேட்டிக் கட்டிக்கொண்டு ஆடிய விந்தை மனிதர் ஆவார். டோக்கி யோ செல்வதற்கு முன்னதாக இந்திய ஹாக்கி அணி நியூசிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் பயிற்சி போட்டிகளில் பங்கேற்றபின் டோக் கியோ சென்றது.
குழுவுக்குள் நடந்த சுழல் போட்டி களில் இந்தியா 12 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. பெல்ஜியத் தை 2-0 எனவும், ஹாங்காங்கை 6-0 எனவும் மலேசியாவை 3-1 எனவும், ஹாலந்தை 2-1 எனவும் இந்தியா தோற்கடித்தது. ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய அணிகளுடன் சமன் செய்து கொண்டது.அடுத்த குழுவில் இரண்டாம் இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலியாவு டன் இந்தியா அரைஇறுதியில் மோதி யது.
அதில் இந்தியா 3-1 என்ற கோல்களில் வென்றது. மற்றொரு அரை இறுதியில் பாகிஸ்தான் வென்று இறுதி ஆட்டத்தில் இந்தியா வைச் சந்தித்தது. இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து மூன்றா வது முறையாக ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் சந்தித்தன.ஆவேசமான போட்டி13.11.1964 அன்று டோக்கியோ கமாசாவா பூங்காவில் இறுதிப்போட்டி நடந்தது. கமாசாவா பூங்காவின் நடு வில் உருவாக்கப்பட்ட மைதானம் என்பதால் மைதானமும் அவ்வாறே அழைக்கப்பட்டது. அனல்பறக்கும் வேகத்தில் இரு அணிகளும் முதல் பாதியில் மோதின. இரு அணிக ளும் கோல்போடவில்லை.பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களைத் தாக்கத்தொடங்கிய வுடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
சில நிமிடங்களுக்குப்பின் ஆட்டம் மீண் டும் தொடங்கியது. சூழ்நிலையின் வெப்பத்தைத் தாங்க இயலாத இந் திய அணி நிர்வாகி இந்தர் மோகன் மகாஜன் மைதானத்துக்கு வெளியே நடைபழகினார். ஆனாலும் உள்ளே நடப்பது குறித்து அறிந்த வண்ணம் இருந்தார்.இரண்டாம் பாதியின் ஐந்தாம் நிமிடத்தில் இந்தியாவின் ‘தற்காப்பு கோட்டை’ என்று அழைக்கப்பட்ட பிரித்பால் சிங் அடித்த பெனால்டி கார்னர் அடி பாகிஸ்தான் கோல்கீப்ப ரின் கால் தடுப்பில் பட்டு கோலை நோக்கி உருண்டது. அதை பாகிஸ் தானின் தற்காப்பு வீரர் முனிர் தார் காலால் தடுத்தார். அதனால் கிடைத்த பெனால்டி ஷாட்டை மொகிந்தர்லால் கோலாக மாற்றினார்.41வது நிமிடத்தில் கிடைத்த கோலுடன் இந்தியா தங்கப்பதக்கத் தை வென்றது.
கடைசி நிமிடங்களில் பாகிஸ்தான் அடித்த இரண்டு பெனால்டி கார்னர் அடிகளை இந் திய கோல்கீப்பர் சங்கர் லட்சுமணன் அனாயசமாகத் தடுத்தார். அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.நாடு திரும்பிய சரண்ஜித் சிங் தலைமை ஏற்ற இந்திய அணிக்கு தில்லி பாலம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தில்லி, ஜலந்தர் ஆகிய நகரங்க ளில், மோட்டார் வாகனங்களில் ஊர் வலமாக அழைத்து வரப்பட்டனர்.இந்திய முன்னணி வீரர் உத்தம் சிங் ஒலிம்பிக்கில் மூன்று தங்கங் களையும் ஒரு வெள்ளியையும் வென்ற வீரரானார். இவருக்கு முன் லெஸ்லி கிளாடியஸ் இதேபோல் பெருமை அடைந்துள்ளார். உத்தம் சிங் 23.3.2000ம் அன்று சொந்த ஊரான சன்சார்பூரில் இயற்கை எய் தினார்.வெற்றி அணி : சரண்ஜித் சிங் (தலைவர்), சங்கர் லட்சுமண்(கோல் கீப்பர்), ராஜேந்திரன் கிறிஸ்டி, பிரித் பால் சிங், தரம்சிங், குர்பக்ஸ் சிங், மொகிந்தர்லால், ஜக்ஜித் சிங், ரஜிந் தர் சிங், ஜோகிந்தர்சிங், ஹரிபால் கௌசிக், ஹர்பிந்தர் சிங், பந்து பட்டீல், வி.ஜே.பீட்டர், உத்தம்சிங், தர் ஷன் சிங், சையது அலி, பல்பீர் சிங் குலார்.

Leave a Reply

You must be logged in to post a comment.