திருவண்ணாமலை, மார்ச். 3-
தகுதியில்லா நபர்களுக்கு விதவை உதவித்தொகை மற் றும் ஆதரவற்ற விவசாய கூலி உதவித்தொகை வழங்கி யதாக செங்கம் வட்டாட்சியர் உள்பட 3 பேரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார்.திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட் டம் மலையனூர் செக்கடி கிராமத்தில் தகுதியில்லாத நபர் களுக்கு விதவை உதவித்தொகை மற்றும் ஆதரவற்ற விவ சாய கூலி உதவித்தொகை வழங்கப்பட்டதாக வரப்பெற்ற புகாரின்பேரில் விசாரணை செய்யப்பட்டு மலையனூர் செக்கடி கிராமத்தில் தகுதியில்லாத நபர்களுக்கு உதவித் தொகை வழங்கியதற்காக முன்னாள் தண்டராம்பட்டு இடர்பாடு நிவாரண வட்டாட்சியராக பணியாற்றிய செங் கம் வட்டாட்சியர், தானிப்பாடி உள் வட்ட வருவாய் ஆய் வாளர், ரெட்டியார் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய மூன்று பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதி யில்லாத நபர்களுக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்டங் களை பரிந்துரை செய்து வழங்கினால் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.மேலும் அரசு நலத்திட்டங்களை பெற்றுத் தருவதாக தெரிவித்து பொதுமக்களிடம் பணம் பறிக்கும் இடைத் தரகர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
ஸ்கேன் மையங்களில் தொடர் ஆய்வு
திருவண்ணாமலை, மார்ச். 3-
திருவண்ணாமலையில் விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கிவரும் ஸ்கேன் சென்டர்களில் அதிகாரிகள் சோத னை நடத்தி வருகின்றனர். இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல் ஸ்கேன் பரிசோதனை மையம் நடத்திய தாக ரூ. 5 லட்சம் மதிப்புள்ள ஸ்கேன் இயந்திரத்தை அரசு அதிகாரிகள் பரிமுதல் செய்துள்ளனர். திருவண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் மருத்துவர் சரவ ணன் (30). இவர் ரஷ்யாவில் 9 ஆண்டுகள் மருத்துவ படிப்பு படித்து எம்.டி. பட்டம் பெற்றுள்ளார். இவர் திருவண்ணா மலை திருவூடல் தெருவில் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் மையம் வைத்து நடத்தி வருகிறார். இம்மையம் தொடர் பான புகாரை அடுத்து ஆய்வு நடத்துமாறு மருத்துவத் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தர விட்டார்.அதனைத்தொடர்ந்து மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநர் ராமலிங்கம், திருவண்ணாமலை கோட்டாட் சியர் பூபதி மற்றும் போலீசார் இம்மையத்தில் திடீரென (மார்ச். 2) அன்று சோதனையில் ஈடுபட்டனர். சரவண னின் மருத்துவ சான்றுகள், ஆய்வக ஆவனங்களை பரி சோதித்த அதிகாரிகள் அங்கிருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள ஸ்கேன் இயந்திரத்தை பரிமுதல் செய்து எடுத்துச் சென் றனர். மேலும் சரவணன், மணிகண்டன் ஆகியோரை திருவண்ணாமலை நகர காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி பின்னர் கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: