கிருஷ்ணகிரி வட்டத் தில் வறண்ட பகுதிகளை கால்வாய் மூலம் இணைத்து பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் படே துலாவ் கால்வாய் திட்டம் கடந்த பத்து ஆண்டுகளாக 13 கோடி ரூபாய் வரை செல வழித்தும் முழுமை பெறா மல் கானல் நீர் திட்டமாக காட்சியளிக்கிறது. இத்திட் டத்தின் நீர் ஆதாரமான மாரசந்திரம் தடுப்பணை கடந்த பல ஆண்டுகளாக நீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனால் தென் பெண்ணை ஆற்று நீரைக் கொண்டு திட்டத்தை நிறை வேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து ஒரு நேரடி ரிப்போர்ட்;கிருஷ்ணகிரி மாவட் டம், கர்நாடக, ஆந்திர மாநி லங்களின் எல்லைகளை ஒட்டி அமைந்துள்ளது. இரண்டு அண்டை மாநிலங் களையும் ஒரு சேர சந்திக் கும் பகுதி கிருஷ்ணகிரி வட் டம் வேப்பனப்பள்ளி ஒன்றி யத்தில் உள்ளது. அண்டை மாநிலங்களின் நீரை ஆதார மாக கொண்ட மார்க் கண்டேய நதி வேப்பனப் பள்ளி கிருஷ்ணகிரி ஒன்றி யங்களில் உள்ள நூற்றுக் கணக்கான கிராமங்களை செழிப்பாக்கியது பழங் கதை.அரசே மணல் அள்ளி நதியை மலடாக்கிய கொடு மையாலும். பொய்த்துப் போன மழையாலும் கடந்த பத்து ஆண்டுகளாக வற ண்டு கிடக்கிறது மார்க் கண்டேய நதி. இதன் விளைவு தென்பெண்ணை ஆற்றில் கலந்து கிருஷ்ண கிரி அணைக்கு வரும் தண் ணீரில் மார்க்கண்டேய நதி யின் பங்களிப்பு முற்றாக நின்று விட்டது. அதை விட கொடுமை மார்க் கண்டேய நதியின் குறுக்கே 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மாரசந்திரத் திரம் தடுப்பணை பல ஆண்டு களாக வறண்டு கிடக்கிறது.குப்பச்சிபாறையை சேர்ந்த விவசாயி இ.தசரதன் கூறும் போது, தனக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு விவ சாய மின் இணைப்பு கிடைத்து விட்டதாகவும் 9 மெட்டு (45 அடி) ஆழம் உள்ள கிணற் றில் தண்ணீர் இல்லாததால் மின் இணைப்பை இது வரை பயன்படுத்த முடிய வில்லை என்றார்.மற்றொரு விவசாயி சி. ஆறுமுகம் கூறுகையில், குடிக்க தண்ணீருக்கே வழி யில்லை. ஆழ் குழாய் கிணறு களில் கூட தண்ணீர் இல்லை என்றார். இத்தடுப்பணை யிலிருந்து 18 ஏரிகளை இணைத்து படேதுலாவ் ஏரிக்கு அமைக்கப்பட்ட 17.9 கிலோ மீட்டர் நீள முள்ள கால்வாய் நீர் வரத்து இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. ஆனால் 2001 ல் அதிமுக அரசு மார்கண்டேய நதியை நம்பி படேதுலாவ் ஏரியிலிருந்து கிருஷ்ணகிரி, பர்கூர், மத்தூர் ஆகிய ஒன்றி யங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய் அமைக்க திட்டமிட்டது. பர்கூர் வரையிலான வறண்ட ஏரிகளை கால்வாய் மூலம் இணைக்க 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகளும் துவக்கப்பட்டன. முடி வடையவில்லை.அடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசும் தன் பங்கிற்கு ஆறரை கோடி ரூபாயை ஒதுக்கியது. கிருஷ்ணகிரி குப்பம் தேசிய நெடுஞ் சாலையில் பாலம் அமைப் பது தவிர மற்ற பணிகள் நிறைவடைந்து விட்டதாக பொதுப்பணித்துறை பொறியாளர் குமார் தெரி வித்தார்.இந்த நிலைமையில் மார்க் கண்டேய நதியிலுள்ள மார சந்திரம் தடுப்பணைக்கே பத்து ஆண்டுகளாக தண் ணீர் வரவில்லை. இந்த நதிக் கான நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததும் ஆற்றில் அதல பாதாளத்திற்கு தோண்டி மணல் அள் ளியதுமே இதற்கு காரணம் என்கிறார்கள் இப்பகுதி மக் கள். இதற்கு மாற்றாக தென் பெண்ணை ஆற்று நீரை என்னேகோல் பகுதியிலி ருந்து புளியஞ்சேரி பீமாண் டப்பள்ளி குந்தாரப்பள்ளி, குப்பச்சிபாறை வழியாக 9 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் அமைத்து மாரசந் திரம் தடுப்பணைக்கும் அங் கிருந்து படேதுலாவ் ஏரிக் கும் கொண்டு செல்ல வாய்ப்புள்ளதாக மாரசந் திரம் பகுதி மக்கள் தெரிவித் தனர்.இது குறித்து பொதுப் பணித்துறையினர் கூறு கையில், தென்பெண்ணை ஆற்றில் உள்ள என்னே கோல் புதூர் தடுப்பணை யிலிருந்து இடது புற கால் வாய் ஜீனூர், திப்பம்பட்டி வழியாக அமைக்க மதிப் பீடு தயாரிக்கும் பணி துவக் கப்பட்டுள்ளது. பேட ரள்ளி கிராமத்தினர் எதிர் ப்பு தெரிவித்ததால் கடந்த 2 மாதங்களாக இப்பணி தடைபட்டுள்ளது என்று தெரிவித்தனர். மாரசந்திரம் தடுப்பணை மேடான பகுதி யில் உள்ளதால் திப்பம் பட்டி கால்வாயுடன் இணைக்க திட்டமிட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தென் பெண்ணை ஆற்றின் வடக் கிலுள்ள மேடான வறண்ட பகுதி மக்கள் விவசாயம் செய்ய முடியாமல் சொந்த நிலங்களை கைவிட்டு அண்டை மாநிலங்களில் தஞ்சமடைந்தும் வருகிறார் கள். மழைக்காலங்களில் வீணாகும் ஆற்று நீரை இப் பகுதியிலுள்ள ஏரிகளுக்கு கொண்டு வரும் திட்டங் கள் பயனளிக்கும் காலத்திற் காக அவர்கள் காத்திருக் கிறார்கள்.சி. முருகேசன்

Leave A Reply