கரூர், மார்ச் 3-
கரூர் மாவட்ட அளவி லான வங்கியாளர்கள் ஆலோ சனைக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெ.ஷோ பனா தலைமையில் நடை பெற் றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட் சியர் பேசுகையில், கரூர் மாவட்டத்தில் பொன்விழா கிராம சுயவேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் 422 குழுக்க ளுக்கும் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 347 குழுக்களுக்கு ரூ.225லட்சம் கடனாக சுழல்நிதி வழங்கப்பட்டுள் ளது. பொருளாதாரக்கட னாக 80 குழுக்களுக்கு ரூ.3.86 கோடி கடன் வழங்கப்பட் டுள்ளது. வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட் டத்தின்கீழ் இதுவரை 111 தொழில் முனைவோருக்கு ரூ.27.26 லட்சம் மானியத் துடன் ரூ.156 லட்சம் கட னுக்கான அனுமதி வழங்கப் பட்டுள்ளது என்று தெரி வித்தார். தாட்கோ மூலம் தனி நபர்கடன் திட்டத்தில் 43 பயனாளிகளுக்கு ரூ.22.48 லட்சம் மானியம் வழங்கப் பட்டுள்ளது. அதேபோல் படித்த இளைஞர்களுக் கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் 7 பயனாளி களுக்கு ரூ.7.33லட்சம் மானி யம் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக் களை பொறுத்தவரை 11 குழுக்களுக்கு ரூ.19.75லட்சம் தாட்கோ மானியம் வழங் கப்பட்டுள்ளது என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் நபார்டு வங்கி உதவி பொது மேலா ளர் பார்த்திபன், கனரா வங்கி உதவி பொது மேலா ளர் சாந்தலிங்கம், மகளிர் திட்ட அலுவலர் சாமு வேல் இன்பதுரை, முன் னோடி வங்கி மேலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply