கள்ளக்குறிச்சி, மார்ச்.3-
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த திருக் கணங்கூர் காட்டு கொட் டாய் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் மகன் பழனி யப்பன் (46) விவசாயி. இவர் தனது இரண்டரை ஏக்கர் நிலத்தில் தென்னை மரம் சாகுபடி செய்துள் ளார். இதன் பராமரிப்பு பணிகளுக்கு தென்னை வளர்ச்சி வாரியம் வழங்கும் ஊக்கத் தொகைக்கு விண் ணப்பித்துள்ளார். அரசு சார்பில், ஊக்கத் தொகை யாக 17 ஆயிரம் ரூபாய் கா சோலையாக கடந்த 17ஆம் தேதி விநியோகம் செய்யப் பட்டது. இந்த காசோலை யைப் பெற கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலு வலக வளாகத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மைய த்தை பழனியப்பன் அணு கியுள்ளார். காசோலையை வழங்க உதவி வேளாண்மை அலுவலர் கணேசன் லஞ்ச மாக 10 ஆயிரம் ரூபாய் தருமாறு பழனியப் பனிடம் கேட்டுள்ளார். கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் தினந் தோறும் பழனியப்பனிடம் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பின் 7,500 ரூபாய் தருவதாக பழனியப் பன் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து பழனியப்பன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் 2ஆம் தேதி புகார் அளித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கன்னியப்பன், ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை யிலான காவல்துறையினர் ரசாயன பவுடர் பூசிய ரூபாய் நோட்டுக்களை பழனியப்பனிடம் கொடுத்து அனுப்பினர். உதவி வேளாண்மை அலுவலர் கணேசன் லஞ்சமாக 7,500 ரூபாயை வாங்கியபோது, கையும் களவுமாக போலீ சார் பிடித்தனர். கணே சனை கைது செய்த போலீ சார் கள்ளக்குறிச்சி மெப் பேரில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவ லகத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசார ணை மேற்கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: