சென்னை, மார்ச் 3-
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தை 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடம் பொதுப் பணித் துறையால் தரைத்தளத்துடன் கூடிய 10 மாடி அடுக்குகள் கொண்ட கட்டிடமாக கட்டப்பட்டது.
பழமையான இக்கட்டடத்தை மேம்படுத்தவும், அரசு அலுவலர்கள் சிறந்த முறையில் பணிபுரிய ஏதுவாகவும், இக்கட்டடம் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாரம்பரிய தோற்றம் மற்றும் எழிலுடன் கூடிய சுவர்களால் ஆன புதிய எழிலான முகப்புத் தோற்றத்துடனும், முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட மின் மாற்றிகளோடு கூடிய ஒருங் கிணைந்த குளிர்சாதன வசதிகள் கொண்ட மேம்படுத்தப் பட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன், சிறப்புத் தொழில் நுட்பத்துடன் கூடிய வர்ண பூச்சுகளைக் கொண்ட வெளிப் புறச் சுவர்கள், மேம்படுத்தப்பட்ட உட்புற சாலை வசதி கள், தண்ணீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் வசதிகள் போன்ற சிறப்பு அம்சங்களோடு புதுப்பிக்கும் பணிக்கு சனிக்கிழமை யன்று (மார்ச் 3) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

Leave A Reply

%d bloggers like this: