புதுதில்லி, மார்ச் 3-
பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு அளித்து வரும் மானியங் களை வெட்டிக்குறைக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பதற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத் தின் தலைவர் எஸ். ராமச் சந்திரன் பிள்ளை, பொதுச் செயலாளர் கே. வரதராசன் ஆகியோர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதா வது:2012-13ஆம் ஆண்டில் 28 விழுக்காடு அளவிற்கு பாஸ் பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு அளித்து வந்த மானியங்களை வெட்டிக் குறைப்பதற்கு மத்திய அமைச்சரவை முடிவு செய் திருப்பதற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
கட்டுப்பாட்டை நீக்கும் முடிவை ரத்து செய்க
சர்வதேசச் சந்தையில் உரங்களின் விலைகள் குறை வதால் விவசாயிகளுக்கு எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் சர்வதேச உரக் கம்பெனிக ளின் ஒரே குறிக்கோள் கொள்ளை லாபம் ஈட்டுதல் என்பதேயாகும். உர விலை களுக்கு இருந்த கட்டுப்பாட் டை நீக்கும் முடிவை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் விவ சாயிகளுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய வகையில் உரங்களின் விலைகளுக்கு மானியங்கள் அளிப்பதன் மூலம் மிகவும் குறைத்து, அதிகபட்ச சில்லரை விலை யினை அரசாங்கம் நிர்ண யம் செய்திட வேண்டும் என் றும் அகில இந்திய விவசா யிகள் சங்கம் கோருகிறது.
கடும் விலை உயர்வு
உரங்களின் விலைகள் மீதிருந்த கட்டுப்பாட்டை நீக்கியதானது உரங்களின் விலைகள் விண்ணை எட்டு வதற்கே இட்டுச் சென்றுள் ளன. ஒரு டன் டை அம் மோனியம் பாஸ்பேட்டின் (டிஏபி) விலை 2010 ஏப்ர லில் 9,350 ரூபாயாக இருந் தது தற்போது 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாகச் சென்றுவிட்டது. சில மாநி லங்களில் செயற்கையாகத் தட்டுப்பாட்டை உருவாக்கி 26 ஆயிரம் ரூபாய் வரைக் கும் விற்கப்படுகிறது. மெட் ரிக் டன் 4455 ரூபாய் விற்ற பொட்டாஷ் உரமும் 12 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விட்டது. இதேபோன்று தான் அனைத்து உரங்க ளின் விலைகளும் உயர்ந் துள்ளன.
32 விழுக்காடு வெட்டு
தற்போது மத்திய அமைச்சரவை டிஏபி, பாஸ் பேட், நைட்ரேட், பொட் டாஷ் உட்பட பல்வேறு உரங்களுக்கு அளித்து வந்த மானியங்களில் 32 விழுக் காடு வரை வெட்டிக் குறைக்க முடிவு செய்துள் ளது. அரசின் இம்முடிவா னது உரங்களின் விலை களை கடுமையாக உயர்த் திடும். விவசாயிகள் உரங் களை வாங்க முடியாது கடும் சிரமத்திற்கு உள்ளா வார்கள். விவசாய நெருக் கடி அதிகரித்து உற்பத்தித் திறன் கடுமையாகப் பாதிக் கும்.
கிளர்ந்தெழுக!
விவசாயிகள் வாங்கக்கூடிய அளவில் உரங்களின் அதிகபட்ச விலையை நிர்ணயம் செய் திட அரசு முன்வர வேண் டும் என்றும் கட்டுப்பா டின்றி விலைகளை நிர்ண யம் செய்திடும் உரக்கம் பெனிகளை அரசு முறைப் படுத்திட வேண்டும் என் றும் விவசாயிகள் சங்கம் கோருகிறது. மத்திய அரசின் இந்த விவசாய விரோத நடவடிக் கைக்கு எதிராகக் கிளர்ந் தெழுமாறு அனைத்து விவசாயிகளையும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவி அழைக்கிறது.இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் தெரி வித்துள்ளனர்.(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.