முசிறி, மார்ச் 3 –
தமிழ்நாட்டில் தற் போது நிலவும் மின் பற்றாக் குறையின் காரணமாக தமிழ் நாடு அரசு ஒப்புதலுடன் தாழ்வழுத்த மின்சாரம் பெறும் தொழிற்சாலைக ளுக்கு வாரம் ஒருநாள் மின் விடுமுறை நாளாக அறிவிக் கப்பட்டுள்ளது. அதன்படி முசிறி கோட்ட பகுதிகளுக்கு உட்பட்ட தொழிற்சாலைகளுக்கு ஒவ் வொரு வாரமும் சனிக் கிழமை மின் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள் ளது. அதாவது வார மின் விடு முறை நாள் என்பது சனிக் கிழமை காலை 6 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரையுள்ள கால மாகும். இந்த மின் விடு முறை நாள் கடந்த 01.03.2012 முதல் நடைமுறைப்படுத் தப்பட்டுள்ளது. மின் விடுமுறை நாளில் நுகர்வோர்கள் தங்களது தொழிற்சாலைகளை இயக்க வேண்டாம் என்று கேட் டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கார ணங்களை கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்டுள்ள விடு முறை நாளில் தொழிற் சாலைகளுக்கு 10 சதவிகித மின் திறன் மற்றும் பய னீட்டு அளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மின் விடுமுறை நாளில் ஒதுக்கீடு செய்யப் பட்ட மின் திறன் மற்றும் பயனீட்டு அளவை விட கூடுதலாக பயன்படுத்த வேண்டாம் என்று தொழிற் சாலை மின் நுகர்வோரை முசிறி மின் வாரிய செயற் பொறியாளர் கருப்பையா கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.