முசிறி, மார்ச் 3-
முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி பேராசி ரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி பேராசிரியர் களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளத் தொகையை கால தாமதப்படுத்துவதாகவும், பேராசிரியர்கள் சங்கத்தில் உள்ள பேராசிரியர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில், அதிகார போக்கு டன் நடந்து கொள்வதையும், கல்லூரிக்கு வராமலேயே வந் ததாக வருகை பதிவேட்டில் கையொப்பம் இடுவதையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு கல்லூரி பேராசிரியர்கள் சங்க முசிறி கிளை தலைவர் மரு தன் தலைமை வகித்தார். திருச்சி மண்டல செயலாளர் செல்வ ராஜ் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு, ஆர்ப்பாட் டத்தை துவக்கி வைத்து பேசி னார்.

Leave A Reply