முசிறி, மார்ச் 3-
முசிறி கைகாட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்துவரும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி இலவச மடிக் கணினியை உடனே வழங்க வேண்டும், தேர்வு நேரத்தில் நிலவும் மின் தடையை போக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முசிறி கைகாட்டியில் திருச்சி – நாமக்கல் சாலையில் இந்த மறியல் நடைபெற்றது.தகவல் அறிந்த முசிறி சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சக்கர வர்த்தி மாணவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தார். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Leave A Reply

%d bloggers like this: