முசிறி, மார்ச் 3 –
முசிறி கல்வி மாவட்ட நிர்வாகமும், ரோசெட் தொண்டு நிறுவனமும் இணைந்து தேசிய பசுமை படை மாணவர்களுக்கு தீ தடுப்பு, பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த கருத்தரங்கத்தை முசிறி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடத்தின. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேது ராமன் தலைமை வகித்தார். முசிறி தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ், திருச்சி தீ தடுப்பு பயிற்சி மைய மேலாளர் தாமோதரன், திருச்சி கல்லூரி உதவி பேராசிரியர் அனிதாச ரோன், தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர்கள் ஆரோக்கிய ஜீலியன், ஜெய வேல், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசி னர். ரோசெட் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பா ளர் சித்ரா அனைவரையும் வரவேற்றார். முசிறி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். ரோ செட் நிறுவன இயக்குநர் துரைராஜ் கருத்தரங்கத்தின் நோக்கம் குறித்து பேசினார். முசிறி, தண்டலைபுத் தூர், மேட்டுப்பாளையம், தா.பேட்டை, உள்ளிட்ட 20 பள்ளிகளைச் சேர்ந்த தே சிய படை மாணவர்கள் 100 பேர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். முசிறி தீய ணைப்பு நிலைய வீரர்கள் தீ தடுப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஒத்திகை யில் ஈடுபட்டு காட்டினர். இறுதியில் ரோசெட் தொண்டு நிறுவன ஒருங்கிணைப் பாளர் மணிமேகலை நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.