புதுக்கோட்டை, மார்ச் 3-
தமிழக அரசு அமல் படுத்தி வரும் வரலாறு காணாத மின்வெட்டைக் கண்டித்தும், விவசாயத் திற்கு தடையின்றி மும் முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தியும் புதுக்கோட் டை மாவட்டத்தில் ஆதனக் கோட்டை, காரையூர் ஆகிய இடங்களில் வெள் ளிக்கிழமையன்று விவசாயி கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆதனக்கோட்டை மின் வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஆர்.நாகராஜ் தலை மை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எம்.வீரப்பன் தொடக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து சங்கத்தின் மாவட் டச் செயலாளர் எஸ்.பொன் னுச்சாமி சிறப்புரையாற்றி னார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் எம்.ராமசாமி, ஆர்.கண்ணன், யு.மலை யாண்டி, டி.செல்வராஜ், டி. லட்சாதிபதி, ஜி.சக்திவேல், ஆர்.ரங்கராஜ், ராஜா, முத்து, ராசு ஆகியோர் பேசினர்.பொன்னமராவதி ஒன் றியம் காரையூர் மின்வாரிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் கே.ராஜா தலை மை வகித்தார். ஒன்றியச் செயலாளர் பி.ராமசாமி தொடக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து மாவட்டத் தலைவர் எம்.செபஸ்தியான் சிறப் புரையாற்றினார். கோரிக் கைகளை விளக்கி சங்க நிர் வாகிகள் அழகுமீனாள், நல்லதம்பி, முத்துராமன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.திருவாரூர்திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி துணை மின் நிலைய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் ஒன்றிய செய லாளர் கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் என்.ராதா ஆர்ப்பாட் டத்தை ஆதரித்து பேசினார். விவசாயிகள் சங்க நிர்வாகி கள் டி.காமராஜ், ஏ.காசி அய்யா, என்.டி.காமராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் டி.சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தஞ்சாவூர்தஞ்சை மாவட்டம், திரு வோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரணிபுரம் இந்தியன் வங்கி அருகில் இருந்து விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வீ.கே. சின்னத்துரை தலைமையில் பள்ளி மாணவர்கள், வகுப் புக்களை புறக்கணித்து மெழுகுவர்த்தி ஏந்தியும், பெண்கள் காலிப் பானை களுடனும் ஊர்வலமாகச் சென்று காரியாவிடுதி மின் சார வாரியம் முன்பு ஆர்ப் பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன் றியச் செயலாளர் கே.ராம சாமி துவக்கி வைத்துப் பேசினார். தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சாமி.நடராஜன் முடித்து வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் பி.செந்தில், விவசாயத் தொழிலாளர் சங்கத் மாவட் டத் தலைவர் ஆர்.வாசு, ஏ.மூக்கையன், தலைவர் கே.ரவிச்சந்திரன், எஸ்.குமர வேல், வீ.பெரியசாமி, கோவிந்தராஜ், துரை உள் ளிட்டோர் கண்டன உரை யாற்றினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.