கொல்கத்தா, மார்ச் 3-
பர்துவான் நகரில் நடந்த பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் கொல்லப்பட்ட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் சடலக் கூராய்வு சான்றிதழ்களைத் தாக்கல் செய்யாது காலம் கடத்தும் மேற்கு வங்க மாநில மம்தா அரசாங்கத் தை கொல்கத்தா உயர்நீதி மன்றம் கண்டித்துள்ளது. பர்துவான் நகரில் கடந்த பிப்ரவரி 22 அன்று நடை பெற்ற பேரணியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பிரதீப் தா, மாவட்டக் குழு உறுப் பினர் கமல் கயேம் ஆகிய இருவரும் திரிணாமுல் குண்டர்களால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
இக் கொலைகள் சம்பந்தமாக மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழக (சிபிஐ) விசார ணைக்கு உத்தரவிட வேண் டும் என்று பொதுநல மனு ஒன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்து வரும் உயர்நீதிமன்ற தலை மை நீதிபதி ஜேஎன் பட் டேல் மற்றும் நீதிபதி சம்ப்தா சக்கரவர்த்தி ஆகி யோரடங்கிய பெஞ்சு, கொல்லப்பட்டவர்களின் சடலக்கூராய்வு (போஸ்ட் மார்டம்) சான்றிதழ்களைத் தாக்கல் செய்யுமாறு பணித் திருந்தது.
சம்பவம் நடை பெற்று பத்து நாட்களாகி யும் அந்தச்சான்றிதழ் களைத் தாக்கல் செய்யாத அரசுத் தரப்பின் மீது பெஞ்சு தன் அதிருப்தியை வெளிப்படுத்தியது.அரசின் இத்தகைய பொறுப்பற்றத் தன்மையைக் கடுமையாகக் கண்டித்த தலைமை நீதிபதி, அரசின் மெத்தனப்போக்கிற்கு முந்தைய அரசாங்கத்தைக் குறை கூறுவதை ஏற்க முடி யாது என்றும், பிற்பகல் இரண்டு மணிக்குள் சான்றி தழ்களைத் தாக்கல் செய் திட வேண்டும் என்றும் கட்டளையிட்டார். அர சின் செயலை நியாயப்படுத் திய அரசு வழக்கறிஞரையும் நீதிபதி எச்சரிக்கை செய் தார்.
இதனை அடுத்து சான்றி தழ்கள் நீதிமன்றத்திற்கு தொலைநகல் (பேக்ஸ்) மூலம் வந்து சேர்ந்தது. இத னை அடுத்து இக்கொலை சம்பவம் தொடர்பாக நீதி மன்றம் சிஐடி விசார ணைக்கு உத்தரவிட்டது.முன்னதாக, உள்ளூர் போலீசார் முறையான விசா ரணையை மேற்கொள்ள வில்லை என்றும் குற்றவாளி களை பாதுகாக்க முயற்சிக் கின்றனர் என்றும் பொது நல மனுத்தாக்கல் செய்த வழக்கறிஞர் இம்ரான் தரப் தார் வாதிட்டார். முதல் தக வல் அறிக்கையில் 22 பேர் குறிப்பிடப்பட்டிருந்தும் 4 பேரை மட்டுமே கைது செய் தனர் என்றும் போலீசார் மீது புகார் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: