வரலாற்றில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இரு தத்துவார்த்த தீர்மானங் கள், வெளியீடு: இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) விற்பனை உரிமை : பாரதி புத்த காலயம், 421, அண்ணாசலை, தேனாம்பேட்டை, சென்னை- 18 பக்: 96. விலை: ரூ . 45/-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்)யின் இருபதாவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் மாதம் நடைபெற உள் ளது. இம் மாநாட்டில் தத்துவார்த்த தீர் மானம் விவாதிக்கப்பட உள்ளது. இந்த விவாதத்தை பயனுள்ளமுறையில் நடத் துவதற்கு முந்தைய தத்துவார்த்த நிலை பாடுகளை அறிந்துகொள்வது அவசியம். 1964ம் ஆண்டு பர்த்துவானில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம், 1992ல் சென் னையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என இரண்டும் ஒரே நூலில் தரப்பட் டுள்ளது. இதனை முழுமையாக உள் வாங்குவது இன்றைய தீர்மானத்தை சரியான கோணத்தில் அணுக உதவும். தத்துவார்த்த விவாதம் என்பது மண்டை வீங்கிய சமாச்சாரம் அல்ல. பாட்டாளி வர்க்கம் போராடி முன்னேற வழிகாணும் மார்க்கம். எனவே இந்த நூல் காலத்தே வெளிவந்துள்ள அவசியமான ஆவ ணம். இந்த இரண்டு தீர்மானங்களை மறு வாசிப்பு செய்வது புதிய சூழலை எதிர் கொள்ள உரிய வியூகத்தை நமக்கு அளிக்கும்.
ரமளானும் ரையானும் ஆசிரி யர்: எம்.ஏ. ஷாஹூல் ஹமீது ஜலாலீ வெளியீடு: அஸீலா பதிப்பகம் 32/1, எம்.என்.பி. முதல் வடக்கு தெரு, பேட்டை, நெல்லை- 627 004. பக்: 60 விலை: ரூ.20/-
ரம்ஜான் மாதத்து இரவுத் தொழுகை யின்போது ஜலாலீ ஆற்றிய உரைகளின் தொகுப்பே இந்நூல். ரமளான் நோன்பு குறித்தும் இஸ்லாமிய நெறிமுறைகள் குறித்தும் அறிந்துகொள்ள இந்நூல் ஒரு சிறு கையேடு. இஸ்லாமியர்கள்மீது விதிக்கப்படுகிற ஜகாத் என்ற வரி, முஸ்லிம் அல்லாதவர்மீது விதிக்கப் படும் ஜிஸ்யா வரி உட்பட பல அம்சங் களை புரிய உதவுகிறது. பிற மத தெய் வங்களை இஸ்லாம் இழிவுபடுத்தக் கூடாது என்கிறது. பத்மநாபபுரம் கோயில் பொக்கிஷங்கள் திறக்கப்பட நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதையும், தாஜ்மகாலில் திறக்கப்படாத கதவுகள் உண்டு என்றும் அஜ்மீர் தர்காவின் வரவு செலவு கணக்கு முழுமையாக எவருக்கும் தெரியாது என்றும், பகிரங்கமாக இந்நூலில் பேசி யிருப்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாம் மார்க்கத்தை வலியுறுத்த எழுதப்பட்ட நூல். எனினும் அனைவரும் இஸ்லாம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள் நிறைந்திருக்கிறது.
பிரான்சில் வர்க்கப் போராட் டங்கள் 1848 – 1850 ஆசிரியர்: காரல் மார்க்ஸ், வெளியீடு : பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசலை, தேனாம் பேட்டை, சென்னை – 600 018 பக்: 188. விலை: ரூ . 95/-
பாரிஸ் கம்யூன் என்று அழைக்கப் பட்ட பாட்டாளி வர்க்க முதல் ஆட்சி முயற்சி வெற்றி பெற்றது எப்படி? குறுகிய காலத்தில் அது வீழ்ந்தது ஏன்? அந்தப் புரட்சியின் பலம், பலவீனங்கள் எவை? எவை? இப்படி எழும் கேள்விகளுக்கு வர லாற்று பொருள் முதல் வாதம் அடிப் படையில் இந்நூல் ஆழமாக ஆய்வு செய்து விடை காண்கிறது. இந்நூலுக்கு பிரெடெரிக் ஏங்கெல்ஸ் எழுதிய விரி வான முன்னுரை இந்நூலைப் போலவே வரலாற்று முக்கியத்துவம் உடையது. இந்நூலைப் படிப்பது வெறும் வரலாற்றுப் பாடத்தை படிப்பது போன்றதன்று. பாட் டாளி வர்க்கம் மீண்டும் எழும் என்கிற நம்பிக்கையை அறிவியல் பூர்வமாக விதைக்கிறார் மார்க்ஸ். சோவியத் யூனியன் சிதைந்து 20 ஆண்டுகளுக்குப் பின் – உலகமயம் பேயாட்டம் போடத்து வங்கி 20 ஆண்டுகளுக்குப் பின் உலகம் சந்திக்கும் சவால்களை எதிர் கொள்ள வும் – மீண்டும் பாட்டாளி வர்க்கத்தை எழுச்சி கொள்ள செய்யவும் இந்நூல் நம் பிக்கை ஊட்டும். ஆழ்ந்து படிக்க வேண் டிய நூல்களில் இதுவும் ஒன்று.

Leave A Reply

%d bloggers like this: