பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த வக்கார் யூனிஸ் உடல்நிலை பிரச்சனையால் கடந்த செப்டம்பர் மாதம் விலகினார். இதன் பின்னர் இடைக்கால பயிற்சியாளராக மோசின்கான் செயல்பட்டார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளராக 57 வயதான ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவ் வாட்மோர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே 1996 ம் ஆண்டு இலங்கை அணி உலக கோப்பையை வென்ற போது, அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தவர். பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக வாட்மோர் நேற்று லாகூர் வந்தார். விரைவில் தொடங்க உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வாட்மோரின் முதல் பணியாக இருக்கும்.

Leave A Reply

%d bloggers like this: