புதுக்கோட்டை, மார்ச் 3-
அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பவர் ந.ரவிச் சந்திரன். இவர் தமிழ்நாடு ஆரம் பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநில பொதுக்குழு உறுப் பினராகவும் உள்ளார். பள்ளி யை சிறந்த முறையில் நிர்வகித்து வருபவர் என்று அப்பகுதி மக்க ளால் பெரிதும் பாராட்டப்படு பவர். இவர் தற்பொழுது வேறு இடத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அன்னவாசல் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலு வலரின் உண்மைக்கு மாறான புகார் அடிப்படையிலும், அரசி யல் தலையீட்டாலுமே இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை நடந் துள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பழிவாங்கும் நட வடிக்கையைக் கண்டித்தும், மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடத்தினர்.ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் ச.அலெக் ஸாண்டர் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் ச.மோ சஸ் தொடக்கவுரையாற்றினார். மாநிலத் தலைவர் தி.கண் ணன் சிறப்புரையாற்றினார்.கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் க.கருப் பையா மற்றும் நிர்வாகிகள் பேசினர். போராட்டத்தை ஆதரித்து அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி சி.கோவிந்த சாமி உள்ளிட்டோர் பேசினர். மாவட்டப் பொருளாளர் ஆ.தவ மணி நன்றி கூறினார். ஆர்ப் பாட்டத்தில் ஏராளமான ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: