திருவாரூர், மார்ச் 3-
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் மஞ்சக் குடியில் உள்ள சுவாமி தயா னந்தா கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் திரு வாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற் றும் சுவாமி தயானந்தா எஜு கேசனல் டிரஸ்ட் இணைந்து, “தொழில் நெறி வழிகாட் டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை” நடத்தின. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் சி.நடராசன் தொடங்கி வைத்து உரை யாற்றினார்.நிகழ்ச்சிக்கு சுவாமி தயா னந்த கல்விக்குழுமத்தின் தாளாளர் ஜி.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இள நிலை வேலைவாய்ப்பு அலு வலர் வ.செல்லதுரை வர வேற்புரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் வேலை வாய்ப்பு வழிகாட்டி சிற் றேடுகளை வெளியிட்டு பேசுகையில்,மாணவர்கள் படிப் பதற்கு காலம் ஒதுக்கீடு செய்து, கஷ்டப்பட்டு படிக்க வேண்டும்.
அப்போதுதான் தன் திறமையை வளர்த் துக்கொள்ள முடியும். நாம் திறமையாக படித்தால் பல்வேறு நிறுவனங்களில் இருந்து வீடு தேடி வேலை வரும்.படிக்கும்போது படிப்பை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நான்கு ஆண்டுகள் படித்தால் நாற் பது ஆண்டுகள் சிறப்பாக வாழ முடியும். மாணவர்கள் வகுப்புப் பாடங்களை மட் டும் படித்தால் போதாது. பல்வேறு நூல்களைப் படித்து குறிப்பு எடுத்து வைத்துக்கொண்டால் ஐ.ஏ. எஸ், ஐ.பி.எஸ் மற்றும் தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று கூறினார்.
இக்கண்காட்சி கருத் தரங்கில் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் ரெ.அறி வழகன், தாட்கோ மாவட்ட மேலாளர் கே.சண்முக சுந்தரம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கே.அசோக்குமார், சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல் வர் என்.ஆர்.வேம்பு, துணை முதல்வர் வி.ரங்கராஜன், விப்ரோ மேலாளர் எம்.ஆர். ராஜகோபாலன், குடவாசல் வட்டாட்சியர் சீனிவாசன் மற்றும் அரசுத்துறை அலு வலர்கள் கலந்து கொண் டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.