நாகப்பட்டினம், மார்ச்3-
கடந்த பிப்ரவரி 12 அன்று நாகை அவுரித்திட லில் செய்தி மக்கள் தொடர் புத்துறை சார்பில் அரசுப் பொருட்காட்சி மற்றும் பல்துறை பணிவிளக்க முகாம் துவங்கியது.கடந்த 20 நாட்களும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் கோலா கலமாய் ஒரு திருவிழா போல் நடைபெற்ற இந்தப் பொருட்காட்சி, வெள் ளியன்று நிறைவுபெற்றது.மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி நிறைவு விழா விற்குத் தலைமை தாங்கிச் சிறப்புரையாற்றினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் யமுனா பாய் வர வேற்புரையாற்றினார்.கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் என்.வி.காம ராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஏ.கே.சந்திரசேக ரன், நகர்மன்றத் தலைவர் மஞ்சுளா சந்திரமோகன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். ‘கொழு கொழு’ குழந் தைகள் போட்டியில் பரிசு பெற்ற குழந்தைகளின் பெற் றோருக்கும் நாய்க் கண் காட்சியில் பரிசு பெற்ற நாய் வளர்ப்போருக்கும் அரசின் பல்வேறு துறைகள் சார் பாக சிறப்பாகக் கண்காட் சியை அமைத்திருந்த அனைத் துத் துறையினருக்கும் மாவட்ட ஆட்சியர் நினைவுப்பரிசு களும் சான்றிதழ்களும் வழங்கிப் பாராட்டினார். இந்த 20 நாள் முகாமை சிறப்போடு நடத்திய செய்தி – மக்கள் தொடர்பு அலுவ லர் பொ.க. பாண்டியனுக்கு மாவட்ட ஆட்சியர் சிறப்பு நினைவுப் பரிசு அளித்தார். முன்னதாக நாகை சக்தி நாட்டியாஞ்சலி குழுவினர் பல்வேறு வகை நடனங் களை நிகழ்த்திக் காட்டினர்.

Leave A Reply

%d bloggers like this: