திமாபூர் (நாகாலாந்து), மார்ச் 1 –
நாகா பிரச்சனை தீர் வுக்கு வரலாற்று, அரசியல் உரிமை செயல்படுத்துதலே சரியானது என்று நாகா நட்புறவு மீட்பு அமைப்புக் கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.நாகா பிரச்சனைக்காக எந்தப் பேச்சுவார்த்தை நடந் தாலும் நாகா மக்கள் வர லாற்று, அரசியல் உரிமை களை நிகழ்கால மற்றும் உலகம் சார் விஷயங்களில் தீர்மானித்தல், பாதுகாத்தல் மற்றும் செயல்படுத்துதல் குறித்து கவனம் செலுத்துவ தாக இருக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.
பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்ட கூட்டத் தில் 4 மணி நேர ஆலோச னைக்குப் பின்னர், மேற் குறிப்பிட்ட தீர்மானம் கொண்டுவரப்பட்டது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாகா கிராமங் கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மக்கள், சமூக குழுக்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் நாகா லாந்து, மணிப்பூர், அசாம், அருணாச்சலப்பிரதேசம், மியான்மர் பகுதியைச் சார்ந்த நாகா மக்கள் கலந்து கொண்டனர். மக்களை சார்ந்திருக்கிற இறையாண்மை கொள்கை மீது, நாகா மக்கள் உறுதி யாக உள்ளனர். நாகா மக் கள், இறையாண்மை மக்கள் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது.தீர்மானத்தை நாகா நட் புறவு மீட்பு அமைப்பின் (எப்என்ஆர்) அமைப்பா ளர் வாஷ் ஏயர் படித்தார்.
இந்த தீர்மானத்தை மக்கள் வரவேற்றனர். நாகா அரசி யல் வரலாற்றில் மிகப்பெரிய கூடுகையாக இந்தக் கூட் டம் அமைந்தது. கூட்ட மேடையில் நாகா தீவிரவாத குழுக்களான நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (மூவய்யா), ஜிபிஆர்என் (கோலே-கோன்யக்), நாகா தேசியக் கவுன்சில், எப்ஜிஎன் (சிங்க்யா) தலைவர்கள் கலந்து கொண் டனர். நாகா மக்களின் இறையாண்மை உரிமை தீர்மானத்தை மத் திய அரசு அதிகாரப்பூர்வ மாக அங்கீ கரித்துள்ளது என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: