கோவை, மார்ச் 3-
கோவையில் தொடர் மின் வெட்டைக் கண்டித்து கஞ்சித் தொட்டி திறந்த தொழிற்துறை, யினர் நூற்றுக்கும் மேற்பட் டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான மின் வெட்டு என்பது அமல்படுத்தப் பட்டு வருகிறது.
இதன்காரண மாக தொழிற்துறையினர் மற் றும் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமை யான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக, தொழில் நகரமான கோவையில் அமல் படுத்தப்பட்டு வரும் 10 மணி நேர மின்வெட்டின் காரண மாக லட்சக்கணக்கான தொழி லாளர்கள் வேலை இழந்துள் ளனர். இந்நிலையில் கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள குறுந்தொழில் அமைப் பான ‘சியா’ சார்பில் சனிக் கிழமையன்று (மார்ச் 3) சிட் கோ முகப்பு பகுதியில் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட் டம் நடைபெற்றது.
இவ்வமைப் பின் தலைவர் எஸ்.பி ரங்க ராஜன் தலைமையில் நடை பெற்ற போராட்டத்திற்கு அனு மதி மறுத்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்துறையினர் 104 பேரை கைது செய்தனர். பின்னர், இது குறித்து சியா அமைப்பின் தலைவர் எஸ்.பி. ரங்கராஜன் தெரிவிக்கையில், நாள்தோறும், எட்டு மணிநேரம் வரை மின்வெட்டு நீடித்து வரும் நிலையில் தினசரி நான்கு மணிநேரம் கூட வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட் டுள்ளது.
இத்தொடர் மின் வெட்டின் காரணமாக உற்பத்தி முடக்கம் ஏற்பட்டு தொழிலகங் களை மூடவேண்டிய கட்டா யத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்நிலையில் வாரம் ஒரு நாள் மின் விடுப்பு என்ற வகை யில் கடந்த வியாழக்கிழமை மின் விடுப்பு விடப்பட்டது. இம்மின் விடுப்பு தினத்தில் சிட்கோ பகுதியில் ஒரு கம் பெனிகூட இயங்கவில்லை. இதன்பின்பு வாரத்தின் மற்ற நாட்களில் மின்வெட்டு இருக் காது என்ற நம்பிக்கையில் இருந்திருந்தோம். ஆனால் முன் னெப்போதும் இல்லாத அள விற்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு என அதிக மாகிவிட்டது.
இனிமேலும் எங்களிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற சூழ்நிலையில் தான் கஞ்சித்தொட்டி திறப்பது என்று முடிவு செய்தோம். இதற் கும் அனுமதி மறுத்து காவல் துறையினர் தற்போது எங்களை கைது செய்துள்ளனர். இதேநிலை நீடித்தால் அடுத்து குடும்பத்தோடு போராடுவது மற்றும் கம்பெனி யை பூட்டி மாவட்ட ஆட்சி யரிடம் சாவியை கொடுப்பது என்று முடிவு செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
இந்த கஞ்சித்தொட்டி திறப்பு போராட்டத்தில் சங்கத் தின் நிர்வாகிகள் ஏ.சுரேஷ் குமார், கருணாகரன், சண் முகம், ஹரி, அமோகராஜ் மற் றும் ஏராளமான தொழிற் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கைது செய்யப் பட்டனர்.——

Leave a Reply

You must be logged in to post a comment.