திருவண்ணாமலை, மார்ச். 3-
திருவண்ணாமலை வட்டார அளவிலான விவசாயி கள் குறைதீர்வு கூட்டத்துக்கு வராத அலுவலர்களை கண்டித்து விவசாயிகள் கருப்பு துணிகளை முகத்தில் கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியர் பூபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல் வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட் டங்கள் குறித்து விளக்கிச் சொல்லுமாறு கேட்டனர். வேளாண் பொறியியல் துறை, பொதுப் பணித்துறை திட்டங்கள் குறித்து விளக்கம் கேட்டபோது, அது குறித்து விளக்க எந்த அலுவலரும் வராதது தெரிய வந்தது.இதையடுத்து கடந்த பல மாதங்களாக இத்துறை அலுவலர்கள் இக்கூட்டத்திற்கு வருவதில்லை. நாங் களும் அடுத்த கூட்டத்துக்கு அலுவலர்கள் வருவார்கள் அவர்களிடம் விளக்கம் பெறலாம் என திரும்பிச் செல் கின்றோம். ஆனால் அத்துறைகளில் உள்ள அலுவலர் கள் குறைதீர்வு கூட்டங்களுக்கு வருவதே இல்லை. எனவே அவர்களை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபடுகின்றோம் என்று கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் முகத்தில் கருப்பு துணிகளை கட்டிக் கொண்டு கூட்டம் முடியும்வரை அமைதியாக அமர்ந்திருந்தனர். இச்சம்பவத்தால் குறை தீர்வு கூட்டத்தில் திடீர் பரபரப்பு நிலவியது

Leave a Reply

You must be logged in to post a comment.