திருவாரூர், மார்ச் 3-
வலங்கைமான் வட்டம் மாணிக்கமங்கலம் ஊராட் சிக்கு உட்பட்ட கள்ளிக் குடி கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முயற்சியின் காரணமாக முதல் முறையாக தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துள்ளது. இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த இப்பகுதி விவ சாயிகள், தங்களின் நன்றி யினை தெரிவிக்கும் வகை யில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கு சால்வை கள் அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன் றியச் செயலாளர் என்.ராதா, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.சுப்பிரமணி யன், கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் என். பாலையா, டி.சண்முகம், மேலசேதுராயநத்தம் கிளைச் செயலாளர் எம்.உத் திராபதி ஆகியோருக்கு விவசாயிகள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்த னர்.இந்த நிகழ்ச்சியில் கட்சி யின் முன்னணி ஊழியர்கள், கிராமப்புற விவசாயிகள், கொள்முதல் நிலைய ஊழி யர்கள் மற்றும் சுமைப் பணித் தொழிலாளர்கள் திர ளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: