சென்னை, மார்ச். 3-
தமிழ்நாட்டில் புதிதாக வீடு, மனை மற்றும் நிலங்களையும், சொத்துக்களையும் பதிவு செய்யும்போது அரசின் வழிகாட்டுதல் மதிப்பின் பேரில் முத்திரைத்தாள் கட்டணம் வசூலிக்கப்படு கிறது. அதன்படி முத்திரைத்தாள் கட்டணம் 6 சதவீதமாக உள் ளது. இதை குறைக்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் டெவ லப்பர்கள் சங்கம் மற்றும் பில்டர்ஸ் அசோசியேசன் உள்ளிட்ட கட்டுமான சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
இதை ஏற்று முத்திரைத்தாள் கட்டணத்தை குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தற்போது 6 சதவீதமாக இருக்கும் முத்திரைத்தாள் கட்டணம் 5 சதவீதமாக குறைக்கப் படும். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. 2 சதவீத சர்சார்ஜ் மற் றும் 1 சதவீத பதிவு கட்டணம் ஆகியவை தொடர்ந்து நீடிக்கும்.
ஒட்டு மொத்த சொத்துக்கான முத்திரைத்தாள் கட்டணம் 9 சதவீதத் தில் இருந்து 8 சதவீதமாக குறைகிறது. ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களுக்கான பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரமாக குறைக்க வும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave A Reply