சென்னை, மார்ச் 3-
விவசாயப் பெருமக்கள் பயன்பெறும் வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பண்ணை பயிர் மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா சனிக்கிழமையன்று (மார்ச் 3) தொடங்கி வைத்தார். பண்ணை அளவிலான இத்திட்டத்தின் மூலம் பயிர் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் வேளாண் வணி கம் சார்ந்த அறிவுரைகளையும் விவசாயிகள் எளிதில் பெற இயலும். இந்த வலைதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்த விவசாயிகள் எந்த நேரத்திலும் கைபேசி மூலம் பண்ணை இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்தலாம்.
மேலும், இதன் மூலம் விவசாயப் பெருமக்கள் உரங் கள், விதைகள் மற்றும் இதர வேளாண் இடுபொருட்கள் இருப்பு விவரங்களையும், வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு அரசு நலத்திட்டங் களையும் எளிதில் அறிந்து கொள்ள இயலும். பயிர் உற்பத்தி மற்றும் வணிகம் தொடர்பான அனைத்து விளக்கங்களையும் இந்த புதிய மென் பொருட்கள் மூலம் மாநிலத்தின் எந்த கிராமத்திலிருந்தும் விவசாயிகள் தகவல் பெற முடியும். இந்நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், வேளாண்மைத் துறைச் செய லாளர், வேளாண்மை ஆணையர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்த் துறை ஆணையர் மற்றும் உயர் அலுவலர் கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: