சேலம், மார்ச் 3-சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லேப்ராஸ்கோப்பிக் முறையில் சிகிச்சை பெறும் வசதி உள்ளதாக மருத்துவமனை முதல்வர் (டீன்) வள்ளிநாயகம் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் கட்டபொம்மன் மற்றும் சில டாக்டர்கள் இணைந்து, இம்மருத்துவமனைக்கு ரூ.‘1.50 லட்சம் மதிப்புள்ள லேப்ராஸ்கோப்பிக் சிகிச்சைக்கான கூடுதல் உபகரணங்களை நன்கொடையாக வழங்கி உள்ளனர். இங்கு, தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் சிறந்த வகையில் லேப்ராஸ்கோப்பிக் முறையில் சிகிச்சை பெறும் வசதி உள்ளது.
லேப்ராஸ்கோப்பிக் முறையில் சிகிச்சை அளிக்கும் வசதி ஏற்கனவே இம்மருத்துவமனையில் இருந்தாலும், அதுபற்றி பொதுமக்களுக்கு போ துமான விழிப்புணர்வு இல்லை. இத்தொழில்நுட்பத்தின் மூலம், உடலில் சாவி துவாரம் அளவில் மூன்று சிறு துளைகள் போட்டு, அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியும். இதனால் சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிகளின் உடலில் தழும்பு, வலி ஏற்படாது. அறுவை சிகிச்சை முடிந்த 2 நாளில் வீட்டுக்குச் சென்றுவிட முடியும்.லேப்ராஸ்கோப்பிக் தொழில்நுட்பம் மூலம் தர் மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சென்னகிருஷ் ணன் (52), திருச்செங்கோ ட்டைச் சேர்ந்த மனோ கரன் (47), சேலத்தைச் சேர்ந்த பழனியம்மாள் (72) ஆகியோருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 13 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
விரைவில் மேலும் 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளிநாயகம் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: