வேலூர், மார்ச் 3-வேலூர் அடுத்த சின்ன அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் செருப்பு தைக்கும் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கும் எதிர்வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்ட தகறாரில் ஊர் பஞ்சாயத்தில் வெங்கடேசன் குடும்பத்தை ஊரைவிட்டுத் தள்ளி வைத்து ள்ளனர்.
இது சம்மந்தமாக வெங் கடேசன் மனைவி லட்சுமி, மாவட்ட ஆட்சியர் அஜய் யாதவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;-என் கணவர் பழைய செருப்பு தைக்கும் தொழில்செய்து வருகிறார். அவருடைய சொற்ப வருமானத்தில்தான் 3 குழந்தைகளைப் படிக்க வைத்து வந்தோம். பெரிய மகள் பிளஸ்2 படித்து வந்தாள். அவள் நன்றாகப் படிப்பதைக் கண்டும், அவள் உடை அணிவதையும் கண்டு பொறாமை கொண்ட எதிர் வீட்டில் வசிக்கும் கமலா என்பவர் கேலியும் கிண்டலும் செய்து வருவார். அதனால், என் மகள் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டாள். எனவே அவளுக்கு உடனே திருமணம் செய்து கொடுத்து விட்டோம். இந்நிலையில் அடுத்த மகன் 10ஆம் வகுப்பு படித்து வந்தான். அவனையும் கேலி செய்து வந்ததால் எங்களுக்கும் கமலாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இத னால் என் மகன் படிப்பைப் பாதி யில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்குச் சென்று வருகி றான்.எங்கள் இரு குடும்பத்தினரின் தகராறு சம்மந்தமாக தீர்வு காண ஊர் பஞ்சாயத்து குழுத் தலைவர் பாலசுப்பிரமணி என்பவரிடம் மனு அளிக்கப்பட்டது.
அதை அவர் விசாரித்து சரியான தீர்ப்பு கூறாமல், என்னுடைய குடும்பத்தை 2 வருடங்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டதாகக் கூறி, என் குடும்பத்தை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள விடாமல் தடுத்து விட்டார்.இதனால் மனவேதனையும், மன உளைச்சலுக்கும் ஆளானதால், குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலையில் அவமானப் பட்டு வருகிறோம்.இந்நிலையில், என் கணவரின் அண்ணன் மரணத்திற்கும், பின்னர் நடந்த காரிய நிகழ்ச்சியிலும் கடந்த வாரம் கலந்து கொண்டோம். இதை அறிந்த பஞ்சாயத்துத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நபரை ஏன் சேர்த்தீர்கள் என தகராறு செய்தார். ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து உள்ளோம் என கூடியிருந்த சொந்தக்காரர்களிடம் சத்தம் போட்டு கூறினார். இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள் ளோம். எனவே ஊர் பொதுமக்களிடமும், பஞ்சாயத்து குழுத் தலைவரிடமும் உரிய விசாரணை நடத்தி, இக்கட்டான சூழலில் வாழ்ந்துவரும் எங்க ளுக்கு நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என்று அம்மனுவில் லட்சுமி கூறியுள்ளார்.
மனுவைப் பெற்ற ஆட்சியர் காவல்துறை விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: