சென்னை, மார்ச் 3-
செய்தி மக்கள் தொடர் புத்துறையின் தலைமை அலு வலகம் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்களுக்கு 2 கோடியே 29 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட் டில் வாங்கப்பட்ட 34 புதிய வாகனங்களை முதலமைச் சர் ஜெயலலிதா சனிக்கிழ மையன்று (மார்ச் 3) வழங் கினார்.
அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், சாதனை கள், நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசின் வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றை மக் களிடம் எடுத்துச் செல்லும் பணியை செய்தி மக்கள் தொடர்புத்துறை செவ் வனே ஆற்றி வருகிறது. இப் பணிகளை செம்மையாக வும், சிறப்பாகவும், துரிதமாக வும் செயல்படுத்தும் வகை யிலும், விளம்பரப் பணி களை விரைவுபடுத்தும் பொருட்டு, 34 புதிய வாக னங்கள் வாங்க முதலமைச் சர் ஆணையிட்டார்.அந்த ஆணைக்கேற்ப, 2 கோடியே 29 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட் டில் 16 பொலிரோ ஈப்பு கள், 17 டெம்போ டிராவலர் வீடியோ வேன் மற்றும் 1 டோயோட்டா இன்னோவா வாகனம் ஆகியவை வாங்கப் பட்டுள்ளன.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் அரசின் விளம்பரப் பணி களை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்காக தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலு வலகங்களுக்காக வாங்கப் பட்டுள்ள 34 புதிய வாக னங்களுக்கான சாவிகளை முதலமைச்சர் ஜெயலலிதா சனிக்கிழமையன்று (மார்ச் 3) தலைமைச் செயலகத்தில், வாகன ஓட்டுநர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறைச் செய லாளர், செய்தி மக்கள் தொடர் புத் துறை இயக்குநர் ஆகி யோர் உடனிருந்தனர்.

Leave A Reply