கோதரர்களே!
கறுப்பர்களின் கல்லறைக்கு நீங்கள் செல்ல நேர்ந்தால் சகோதரிகளைகைகோர்த்துச் செல்லுங்கள்!அங்கேஇறுதி நம்பிக்கை செம்மலராய்பூத்துக்குலுங்கக் காண்பீர்! மக்கள் விழித்தெழும்வேளையே சக்கரவர்த்திகளின் இறுதி நாட்கள்.அப்போது புன்னகையும்கூட செம்பூவாய் சிரிக்கும்.மீண்டும் மீண்டும் நாம் எழுவோம் அவை நம்மிடம் பேசும்.துயரம் தோய்ந்த கறுப்பு சிறைவாசிகளே! உங்கள் நிழலிலும் நம்பிக்கை துளிர்விடும்அவரிடம் /அவளிடம் கூறுங்கள்! உங்களை நாங்கள் நேசிக்கிறோம்விரைந்தோடுகிறது காலம் எதிர்காலத்துக்குரியதே அனைத்தும் வெளிறிப்போய் மரண பயத்தில் நம்மை வீழ்த்தியதாய் சொன்னவர்கள்உறைந்து கிடக்கிறார்கள்அவர்கள் வீழ்ச்சியும் நமது வெற்றியும் நிச்சயமானவைநடந்தே தீரும்!”
இந்தக் கவிதையை கம்பீரமாய் முழக்கியவர் லூயிஸ் மிச்சேல். பாரிஸ் கம்யூன் என்கிற முதல் பாட் டாளி வர்க்க அரசு முயற்சியில் பங் கேற்ற வீராங்கனை. அராஜகவாதி என ஆளும் வர்க்கத்தால் முத்திரை குத்தப்பட்ட வீரப்பெண். பின்னர் அதனையே தன்வழியாகவும் வரித் துக் கொண்டவர். அந்த எழுச்சியின் போது காயமுற்றவர்களை அழைத் துச் செல்லும் ஆம்புலன்ஸ் பெண் ணாக துணிச்சலாகப் பணியாற்றியவர். 1830 மே 29ஆம் நாள் சாதாரண வீட்டுப் பணிப்பெண்ணுக்கு மகளாக பிறந்தார். தந்தை வழி தாத்தாவால் வளர்க்கப்பட்டார். பள்ளிப் பருவத் திலேயே புரட்சிகரக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு தன்னை அதில் ஈடு படுத்திக் கொண்டவர்.
புரட்சி என்பது மாலை நேர விருந் தல்ல என்பது இவரது திடமான நம் பிக்கை. புரட்சிப் போரில் மரணிப் பதை பெருமையோடு இவர் கொண் டாடினார். புரட்சி உண்மையில் கடுமையான ரத்தக்களரியாகத்தான் இருக்கும். ஆனால் இறுதியில் மனித சமூகத்திற்கு மெய்யான மகிழ்ச்சியை கொண்டு வரும் என்று நம்பினார். பிரச்சாரம் செய்தார். அவ்வழியே செயல்படவும் செய்தார். புரட்சிக்கான போரில் எதிரியை தீர்த்துக் கட்டும்போது அதற்கான பொறுப்பை நெஞ்சை நிமிர்த்தி ஏற்றுக்கொள்ள வேண்டும். ஓடி ஒளியக்கூடாது என்பது இவரது திடமான நம்பிக்கை. அதேபோல் அப்போரில் 1878ல், தான் மேற்கொண்ட சாகசங்களுக்கு தானே நேரடியாகப் பொறுப்பேற் றார். விளைவு சிறைப்பட்டார். அற்ப ஆயுளில் பாரிஸ் கம்யூன் தோற்றது. பாரிஸ் கம்யூனின்போது ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை என்றார் மார்க்ஸ். ஆனால் பாரிஸ் கம்யூன் வீழ்ச் சிக்குப் பிறகு லூயிஸ் மீது அடுக்கடுக் காக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட் டன. ஆயுள் தண்டனை விதிக்கும் அளவுக்கு விசாரணை நடைபெற்றது.
ஆயினும் இவருடைய சிறை வாசத்தை எதிர்த்து உலகம் முழு வதும் கண்டனக்குரல் எழுந்ததால் ஒரு கட்டத்தில் விடுவிக்கப்பட்டார். பாரிஸ் கம்யூனின் முன்னணிப் படையாக பல பெண்கள் அளப் பரிய உறுதியுடனும் வீரத்துடனும் போராடியதை மார்க்ஸ், அவரது நூலில் நினைவுகூர்ந்து பாராட்டுகி றார். “குழு குழுவாக நின்று போரா டிய அந்த வீரப் பெண்களுக்கு என் னுடைய வீர வணக்கம்” என அவர் அஞ்சலி செய்தார். பெண்களின் விடுதலையில் லூயிஸ் மிச்சேல் யாரையும் நம்பத் தயாராக இல்லை. இந்த சமூகத்தில் நிகழும் கொடுமைகளில் ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆயினும் பெண்கள் படும் துயருக்கு எதுவும் ஈடில்லை. பெண் விடுதலையை சமத் துவத்தை கெஞ்சிப் பெறமுடியாது. நாமே எடுத்துக் கொள்ள வேண்டும். பாலியல் விவகாரங்களில் முழுச் சுதந்திரம் வேண்டும். இப்படி வலு வாக பெண்ணியம் பேசியவர். எழுதி யவர். இவரின் கவிதைகள் மட்டுமல்ல பேச்சே கவிதையாகத்தான் இருக்கும். 1880ஆம் ஆண்டு இவருக்கு விடுதலை வழங்கப்பட்ட பின் 1881ல் லண்ட னில் நடைபெற்ற அராஜகவாதிகள் மாநாட்டில் பங்கேற்றார். பிரான்ஸ் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.
இவருடைய கனல் கக்கும் உரை கண்டு மிரண்ட ஆட்சியாளர்கள் 6 ஆண்டு தண்டனை விதித்து சிறை யில் அடைத்தனர். ஆயினும் 3 ஆண்டு களில் விடுதலை செய்யப்பட்டார். லண்டன், பிரான்ஸ் என எங்கும் சுற்றிச் சுற்றி தன் கருத்துகளை பிரச் சாரம் செய்தவர். ஆதிக்கம் எந்த ரூபத்தில் வந்தா லும் எங்கிருந்து வந்தாலும் ஏற்க முடியாது என்கிற உறுதி படைத்தவர். அதனை மோதி உடைக்க வேண்டும் என்கிற ஆவேசம் மிக்கவர். இவர் சிந் தனைகளில் பெண்ணியமும், சமத்து வமும் எப்போதும் வலுவாக வெளிப் படும். வழிமுறைகளில் ஒழுங்கமைக் கப்பட்ட அமைப்பை விட நேரடி மோத லுக்கே இவர் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். இதனால் பலமுறை சிறைவாசத்தை தானே வரவழைத் துக் கொண்டார். அவர் தேர்ந்தெடுத்த வழிமுறை பிழையானது. லட்சியத்தை வென் றெடுக்க உதவாது. எனினும் தன்னலங் கருதா அவருடைய போராட்டமும் வாழ்க்கையும் நம்மை வியக்க வைக் கின்றன. இவருடைய வாழ்க்கை வர லாறு ‘சிகப்பு கன்னிமை’ (ரெட் வெர் ஜின்) என்ற நூலாக வெளி வந்துள் ளது.
உலகம் முழுவதும் உள்ள பெண் ணியப் போராளிகளால் விரும்பிப் படிக்கும் நூலாக உள்ளது. பொது வாக லூயிஸ் மிச்சேலை ‘போனே லூயிஸ்’ (நல்ல லூயிஸ்) என்றும் ‘விர்ஜோ ரோஜ்’ (சிகப்பு கன்னி) என் றும் அழைப்பார்கள். அதன் தொடர்ச்சி யாகவே அவரின் வாழ்க்கை வர லாற்று நூலும் அப்பெயரைப் பெற் றது. 1905ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் நாள் ஒரு ஹோட்டலில் தங்கியிருக் கும்போது உயிர் நீத்தார்.அவருடைய கவிதைகள் இன் னும் பேசப்படுகிறது. நான் குற்றவாளிகளை சண்டியர்களை நிறையவே சந்தித்திருக்கிறேன் அவர்களோடு உரையாடியிருக்கிறேன்அவர்கள் இப்படியானதற்குநீங்கள்தானே பொறுப்பு! பிறக்கும்போதே குற்றவாளியாக பிறந்தாருண்டோ?எல்லா ஆண்களும் மண்டியிட்டு அழுங்கள்இன்றைக்கு அவர்கள்இப்படியானதற்கு நீங்கள்தானே பொறுப்பு?(பெண்கள் அழுவதை இவர் ஒருபோதும் விரும்பியது இல்லை.)

Leave A Reply

%d bloggers like this: