சென்னை, மார்ச் 3-
தெற்கு ரயில்வே அறிவித்த கோடைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமையன்று (மார்ச் 3) காலை தொடங்கியது.கோடைக்கால நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, கோவா, கொல்லம், கோவை, சொரனூர் ஆகிய ஊர்களுக்கு 13 வாரந்திர மற்றும் வாரம் இருமுறை செல்லும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமையன்று (மார்ச் 3) காலை 8 மணிக்கு தொடங்கியது. வழக்கமாக தென் மாவட்ட ரயில்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப் பட்டால் முன்பதிவு மையங்களில் கூட்டம் அலை மோதும். ஆனால் முன்பதிவு தொடங்கியபோது சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முன்பதிவு மையங்களில் வழக்கமான கூட்டமே இருந்தது. பெரும்பான்மையான முன்பதிவுகள், இணையதளங்கள் மூலம் செய்யப் படுவதால் முன்பதிவு மையத்துக்கு நேரில் வந்து ஏமாறு வதை மக்கள் தவிர்க்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.