சென்னை, மார்ச் 3-
கேஸ் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்தை முடி வுக்கு கொண்டு வருவது தொடர்பாக, சென்னையில் சனிக்கிழமையன்று (மார்ச் 3) முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.சமையல் கேஸ் சிலிண் டர்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட் ரோலியம் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலி யம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் சப்ளை செய் கின்றன.
இதற்காக டேங்கர் லாரி உரிமையாளர்களு டன் ஆயில் நிறுவனங்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகை ஒப்பந்தம் ஏற் படுத்தி கொள்கின்றன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சார் பில் 4,100 வாகனங்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட் டது.மேலும் புதிதாக டெண் டரில் பங்கேற்றுள்ள 600 டேங்கர் லாரிகளுக்கும் கான்ட் ராக்ட் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன. அதை ஏற்க ஆயில் நிறுவனங்கள் முன் வரவில்லை. இதனால் கடந்த 29ம் தேதி முதல் 2வது முறை யாக டேங்கர் லாரி உரிமை யாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை சென்னை எழில கத்தில் சனிக்கிழமையன்று (மார்ச் 3) பகல் 12 மணிக்கு தொடங்கியது.டேங்கர் லாரி உரிமையா ளர் சங்க தலைவர் பொன்னம் பலம், செயலாளர் என்.ஆர். கார்த்திக், துணை தலைவர் கள் நல்லுசாமி, முத்துசாமி, பொருளாளர் தங்கவேலு உள்பட 7 பேர் கொண்ட குழு வினர், ஐஓசி, எச்பி, பிஎச்பி ஆகிய நிறுவனங்களின் செயல் இயக்குனர்கள், அரசு தரப் பில் உணவு பொருட்கள் வழங்கல் துறை ஆணையர் பஷீர் அகமது, பொது மேலா ளர்கள் குட்டி, ராஜேந்திரன் ஆகியோர் பேச்சுவார்த் தையில் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.