சென்னை, மார்ச் 3- தமிழக அரசின் உதவி யோடு கூடங்குளம் விரை வில் திறக்கப்படும் என மத் திய இணை அமைச்சர் நாரா யணசாமி தெரிவித்தார்.சத்தியமூர்த்தி பவனில் அவர் சனிக்கிழமையன்று (மார்ச் 3) அளித்த பேட்டி:தமிழகத்தில் 3,500 மெகா வாட் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது.
ஆனால், இது பற்றி போராட்ட குழுவினர் கவலைப்படவில்லை. போராட்டக் குழுவினருக்கு 12 தொண்டு நிறுவனங்களில் இருந்து நிதியுதவி செய்யப் படுவதாக தெரியவந்தது. அதில், 6 நிறுவனங்களை மத்திய உள்துறை அமைச் சகம் கண்காணித்தது. 3 நிறு வனங்களின் வங்கி கணக்கு களை முடக்கியது. அந்த நிறு வனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. போராட்டக்குழுவினர் மீது தமிழக அரசு 156 வழக்கு களை பதிவு செய்துள்ளது. அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண் டும்.கூடங்குளத்தை திறப்ப தில் மத்திய அரசு உறுதி யோடு உள்ளது.
தமிழக அரசின் உதவியுடன் மத்திய அரசு கூடங்குளத்தை விரை வில் திறக்கும். இப்பிரச் சனையில் மத்திய அரசுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது.இலங்கைக்கு எதிராக ஐநா சபையில் அமெரிக்கா கொண்டு வர உள்ள மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தியுள்ளோம். மனித உரிமை மீறல் எந்த நாட்டில் நடந்தாலும் அதை மத்திய அரசு கண் டிக்கும்.இவ்வாறு அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: