திருநெல்வேலி, மார்ச் 3-
கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் இயக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி அப்பகுதி முழுவதிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் குழுவுக்கு அமெரிக்கா உள் ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக குற்றச் சாட்டு எழுந்தது.
இதையொட்டி 4 தொண்டு நிறுவனங்களுக்கு வரக்கூடிய வெளிநாட்டு நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற் பட்ட தொண்டு நிறுவனங்கள் உள்ளன. இந்த தொண்டு நிறு வனங்களை தமிழக கியூ பிரிவு போலீசார் தீவிரமாக கண் காணித்து வருகிறார்கள். தமிழக அரசு சார்பில் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய குழு அமைக் கப்பட்டது. இந்த குழுவினர் தனது அறிக்கையை 2 நாட்களுக்கு முன்பு முதல்வரிடம் ஜெயலலிதாவிடம் தாக்கல் செய்தனர்.இந்த நிலையில் வெள்ளியன்று தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் கூடங்குளம் சென்று ஆய்வு நடத்தினார்.
பக்கத்து கிராமங்களில் இருந்து கூடங்குளம் செல்லும் சாலைகளை அவர் ஆய்வு செய்தார். இதன் மூலம் கூடங்குளம் அணுமின் நிலையம் முழுமையான போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: