கிருஷ்ணகிரி, மார்ச் 3-
கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை நடந்த விபத்தில் மினி பேருந் தும் காரும் எரிந்து நாச மானதில் இரண்டு பேர் பலியாகினர்.பெங்களுருவை சேர்ந்த ஹரீஷ் (40) அவரது சகோ தரர்கள் வாசு (35), பாபு (30) மற்றும் குடும்பத்தினர் வேலூர் மாவட்டம் சோளிங்கரில் உறவினர் திருமண நிகழ்ச்சி யில் கலந்து கொள்ள காரில் புறப்பட்டனர்.
சனிக்கி ழமை (மார்ச் 3) அதிகாலை 5.45 மணியளவில் கிருஷ்ண கிரியை கடந்து சென்று கொண்டிருந்தனர். அப் போது கிருஷ்ணகிரி அருகி லுள்ள பெத்தனம்பள்ளியி லிருந்து காய்கறிகளுடன் விவசாயிகள் மற்றும் வியா பாரிகளை ஏற்றிய மினி பேருந்து சென்னை சாலையி லிருந்து நகருக்குள் நுழை வதற்காக திரும்பி நாற்கர சாலையின் குறுக்கே புகுந் தது. வளைவு பகுதி என்ப தால் எதிரபாராத விதமாக மினிபேருந்தின் பக்கவாட் டில் கார் மோதியது. சம்பவ இடத்திலேயே வாசுவின் மகள் மோனிஷா (12) உயிரி ழந்தார். மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் ஹரிஷ் இறந்து விட்டார. காரில் இருந்த 3 சிறுவர்கள் மினி பேருந்தில் இருந்த 15 பேர் உட்பட 22 பேர் படுகாயங் களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர்.
மினிபேருந்தில் இருந்த வர்களும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் விபத்தில் சிக்கியவர்களை காரில் இருந்து உடனடியாக மீட்ட னர். அதே நேரத்தில் டாங்கி லிருந்து கொட்டிய டீசல் எரிந்து மள மள வென இரு வாகனங்களிலும் நெருப்பு பரவியது. தீயணைப்பு மற் றும் மீட்பு படையினர் நெருப்பை அணைத்தனர். கிருஷ்ணகிரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: