புதுக்கோட்டை, மார்ச் 3-
புதுக்கோட்டையிலுள்ள தமிழ்நாடு கால்நடை மருத் துவ அறிவியல் மேம்பாட் டுத் திட்டம் மூலம் மூன்று மாத இலவசத் திறன் மேம் பாட்டுப் பயிற்சி அளிக் கப்பட உள்ளது. இம்மையத்தின் தலை வர் பி.என்.ரிச்சர்டு ஜெகதீ சன் இதுபற்றி தெரிவித் திருப்பதாவது:-செயற்கை முறை கரு வூட்டல், கால்நடை, கோழி களுக்கு தடுப்பூசி போடுதல், தீவனப்புல் உற்பத்தி, தீவனத் தயாரிப்பு, குஞ்சுபொரிப்பு மேலாண்மை, வணிக முறை யிலான ஈமு கோழி வளர்ப்பு, அறிவியல் முறையில் வெள் ளாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, கறவை மாடுகள் இனப்பெருக்க மேலா ண்மை, வான்கோழி இனப் பெருக்க மேலாண்மை, பால்உற்பத்தி, பால் பொருள் தயாரிப்பு, இறைச் சிப் பொருள் தயாரிப்பு ஆகி யவற்றில் திறன் மேம்பாட் டுப் பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.இப்பயிற்சியில் சேர 18 வயதிற்கு மேற்பட்டவர்க ளாகவும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். மூன்று மாத பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். பயிற் சிக் கட்டணம் கிடையாது. பயிற்சியின் போது செயல் விளக்கம் பெறும் வகையில் பிற பண்ணைகளைப் பார் வையிடுதல் மற்றும் பரா மரிப்பு முறைகளில் செயல் விளக்கம் அளிக்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர விரும்புவோர் மார்ச் 10 ஆம் தேதிக்குள் புதுக்கோட்டை அண்டக்குளம் சாலையி லுள்ள மண்டல ஆராய்ச்சி மையத்திற்கு நேரில் சென் றோ அல்லது 04322-271443 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ தங்களது பெய ரைப் பதிவு செய்து கொள் ளலாம். ஒவ்வொரு பயிற் சிக்கும் தனித்தனியே முத லில் வரும் 25 முதல் 50 நபர் கள் மட்டுமே சேர்த்துக் கொள் ளப்படுவர். இவ் வாறு அந்த செய்திக்குறிப் பில் தெரி விக்கப்பட்டுள் ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.