திருவண்ணாமலை, மார்ச். 3-
திருவண்ணாமலை அடுத்துள்ள தனியார் பொறியி யல் கல்லூரி மாணவர்கள் இருவர் கிணற்றில் மூழ்கி இறந்தனர்.வேலூரைச் சேர்ந்த பிரவீன்குமார் (எ) நவீன்குமார் (20). காஞ்சிபுரத்தைச் சேர்ந்த திருக்குமரன் (20) இவர்கள் இருவரும் திருவண்ணாமலை அருகே உள்ள தனியார் பொறியல் கல்லூரியில் மூன்றாமாண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தனர். (மார்ச்.3) பிற்பகல் இரு வரும் கல்லூரிக்கு பின்னால் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். நீண்டநேரம் ஆகியும் அவர் கள் வராததால் சந்தேகம் அடைந்த மாணவர் ஒருவர் கிணற்றைச் சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் கள் இருவரும் இறந்து கிடந்ததாக தெரிகிறது.இதுகுறித்து தகவலறிந்த வெறையூர் போலீசார் சம் பவ இடத்திற்குச் சென்று சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.