கரூர், மார்ச் 3-
கரூர் மாவட்ட ஆட்சி யரகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்கான முன்னேற் பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெ.ஷோபனா தலைமை யில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், மேல்நிலைத் தேர்வுகள் 08.03.2012ல் துவங்கி 30. 03.2012ல் முடிவடைகின்றன. கரூர் மாவட்டத்தில் 78 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 4280 மாணவர் களும், 4996 மாணவியர் களும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வை எழுத உள்ளனர். இத்தேர்வுகள் 26 மையங்களில் நடைபெறு கின்றன. தேர்வு எழுதும் மாணவ – மாணவியர் மற்றும் தேர்வு கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்தில் செல்லிட தொலைபேசி பயன்படுத்தக் கூடாது. மாணவ -மாணவி யர்களுக்கு குடிநீர் வழங்க அந்தந்த மையங்களில் தகுந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. தேர்வு முறை யாக நடைபெறுகிறதா என் பதை கண்காணிக்க பறக் கும் படைகளும் அமைக் கப்பட்டுள்ளன. மேலும் தேர்வினை கண்காணிக்க காவல்துறை, வருவாய்த் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கண் காணிப்பு பணியில் ஈடு படுத்தப்பட உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.அசோகன், மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (பொது) ஜெயக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் அருள் மொழிதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.