ஓசூர், மார்ச்.3-ஓசூர் அதியமான் கல்லூரியில் கிருஷ்ணகிரி மாவட்ட சதுரங்க சங்கம் கேடிசிஏ சார்பில் 7 நாட்கள் சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத் சதுரங்கப் போட்டியைத் துவக்கி வைத்தார். சங்க நிறுவனர் கண்டாடி முன்னின்று நடத்தினார்.இந்தப் போட்டிகளில் 9 வயதுக்குட்பட்ட பிரிவில் 136 பேர் கலந்து கொண்டனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் கலந்து கொண் டனர். புள்ளிகள் தர வரிசையில் ஆண், பெண் இரு பால ரிலும் 10 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டனர். அதிலும் மிக அதிகப் புள்ளிகள் பெற்ற 9 பேர் அக்டோபரில் டெல்லியில் தேசிய அளவில் நடைபெற இருக்கும் உலகத் தரவரிசைக்கான போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டனர். சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றிதழ்களும், சிறந்த 8 வீரர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. அதியமான கல்லூரி நிர்வாகம் விளை யாட்டு வீரர்கள் அனைவருக்கும் அனைத்து வசதிகளும், உதவிகளும் செய்து கொடுத்து உற்சாகப்படுத்தியது.

Leave A Reply

%d bloggers like this: