புதுச்சேரியில் இறந்த காப்பீட்டு ஊழியரின் குடும்ப நிதி உயர்வு
புதுச்சேரி, மார்ச் 3-
புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத் தின் மண்டல இயக்குநர் ஏ.எ. மீரான் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:இ.எ.ஐ திட்டத்தின் கீழ் சார்ந்தோர்க்கான பண உதவி இறந்த காப்பீட்டு தொழிலாளியின் ஊதியத் தின் அடிப்படையில் வழங் கப்பட்டு வந்தது. குறை வான ஊதியம் பெற்றவ ருக்கு குறைவான சார்ந் தோர் உதவித் தொகையே இதுகாறும் வழங்கப்பட் டது.
வைரவிழா கொண்டா டும் தொழிலளார்கள் அரசு காப்பீட்டுக் கழகம் வைர விழா ஆண்டின் ஒரு முக் கிய முடிவாக சார்ந்தோருக் கான மாதாந்திர உதவித் தொகையினை ஒரு குடும்பத் திற்கு ரூ.1,200 க்கு குறையா மல் இருக்குமாறு முடிவெ டுத்து அந்த அதிகரிக்கப் பட்ட தொகை 1.3.2012 முதல் வழங்கப்பட உள் ளது.இது நாள் வரை ரூ.1,200 க்கு குறைவாக சார்ந்தோர் பண உதவி பெற்று வந்த இறந்து போன காப்பீட்டுத் தொழி லாளியின் குடும்பம் 1.3.2012 முதல் குறைந்தபட்சமாக ரூ.1,200 பெறும். இவ்வாறு மண்டல இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள் ளார்.
————————–
சங்கரன்கோவில் தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம்
சென்னை, மார்ச் 3-
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலை கவ னித்து வரும் தேர்தல் அதி காரி செல்வராஜ் திடீரென மாற்றப்பட்டுள்ளது அரசி யல் கட்சிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.சங்கரன்கோவில் தொகு திக்கு வரும் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தொகுதிக் கான வேட்பு மனு வாபஸ் சனிக்கிழமை (மார்ச் 3) கடைசி நாள் என்பதால் தேர்தல் அதிகாரி இறுதி பட்டியலை வெளியிட்டார்.இதைத் தொடர்ந்து உடனடியாக தேர்தல் அதி காரி செல்வராஜ் மாற்றப் பட்டார். அவருக்கு பதிலாக பரமசிவன் என்பவர் நிய மிக்கப்பட்டுள்ளார்.ஆனால், தேர்தல் அதி காரி செல்வராஜ் ஓய்வு பெற இன்னும் 30 நாட்கள் இருக் கிறது. அதற்குள் மாற்றப் பட்டுள்ளது அரசியல் கட்சி கள் இடையே பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
—————————–
தானே புயல் பாதிப்பு:சிறைத்துறை அலுவலர்கள் நிதி
சென்னை, மார்ச் 3-
தமிழகத்தை தாக்கிய தானே புயலால் பாதிக்கப் பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங் களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல மைச்சரின் பொது நிவா ரண நிதிக்கு, கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் / சிறைத்துறைத் தலைவர் எஸ்.கே. டோக்ரா, சிறைத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளமான 23 லட்சத்து 65 ஆயிரத்து 995 ரூபாய்க்கான காசோலையினை முதல மைச்சரிடம் வழங்கினார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 135 கோடியே 56 லட்சத்து 31 ஆயிரத்து 966 ரூபாயாகும்.
——————————-
பைக் மீது கார் மோதி ஒருவர் பலி
உளுந்தூர்பேட்டை, மார்ச் 3-
திருக்கோவிலூர் அருகே ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (23), சாந்தசீலன் (21), உதயசூரி யன் (24) ஆகியோர் நேற்று மாலை ஒரு பைக்கில் உளுந் தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டு இருந்தனர். ஏ.புத் தூர் சாலை அருகே சென்ற போது, கள்ளக்குறிச்சியில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த கார் பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற சக்திவேல் பரிதாப மாக இறந்தார். மற்றவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: