காரைக்காலில் ஆசிரியர்கள்உண்ணாவிரதம
காரைக்கால், மார்ச் 3-
புதுவை யூனியன் பிர தேச கல்வித்துறையைக் கண்டித்து காரைக்கால் கல்வி அதிகாரி அலுவல கம் முன்பு ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந் தனர்.இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஸ்ரீனி வாசன் தலைமை வகித்தார். ஆசிரியர் நியமன விகிதத் தில் தொடக்க பள்ளி ஆசி ரியர்களுக்கு இழைக்கப் பட்ட அநீதியினை களைய வேண்டும். பதவி உயர்வுகளை காலத்தோடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கைகள் போராட்டத் தில் முன்வைக்கப்பட்டன. உண்ணாவிரத போராட் டத்தில் ஏராளமான ஆரம் பக்கல்வி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
முசிறியில் நாளை மின் நிறுத்தம்
முசிறி, மார்ச் 3 –
முசிறி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற் கொள்ள இருப்பதால் முசிறி, சந்தைபாளையம், அழகாப்பட்டி, தண் டலைபுத்தூர், வேளக்கா நத்தம், அந்தரப்பட்டி, காமாட்சிபட்டி, சிந்தம் பட்டி, அலகரை, கோடி யாம்பாளையம், சீனிவாச நல்லூர், தும்பலம், சிட்டி லரை, மேட்டுப்பட்டி, முத் தம்பட்டி, திருஈங்கோய் மலை மற்றும் துணை மின் நிலையத்திற்கு உட் பட்ட பகுதிகளில் மார்ச் 5ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்தடை அறிவிக் கப்பட்டுள்ளது.முசிறி மின்வாரிய செயற்பொறியாளர் (பொ) கருப்பையா இத்தக வலைத் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கக் கூட்டம்
திருவாரூர், மார்ச் 3-
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் அமைப்பு நாள் கூட்டம், திருவாரூர் வருவாய்த் துறை அலுவலர் சங்க கட் டிடத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலா ளர் டி.சீனிவாசன் வரவேற் றார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.ராமதாஸ், மாநில செயற்குழுவின் முடிவின்படி மார்ச் 13ஆம் தேதி நடைபெற உள்ள தர்ணா போராட்டத்தில் ஓய்வூதியர்கள் அனை வரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். அரசு ஊழி யர் சங்க முன்னாள் மாவட் டச் செயலாளர் குரு.சந்திர சேகரன், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் கே.வி.நடராஜன் ஆகி யோர் உரையாற்றினர். மாவட்ட பொருளாளர் ஏ.பெத்தபெருமாள் நன்றி கூறினார்.
தமுமுக ஆர்ப்பாட்டம்
காரைக்கால்,மார்ச் 3-
காரைக்கால் முஸ்லிம் வித்தியா சங்க உயர் நிலைப் பள்ளி நிர்வாகத் தை முற்றிலுமாக கலைத்துவிட்டு புதிய நிர் வாகத்தை ஏற்படுத்த வலி யுறுத்தி தமுமுக சார்பில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் ஜெக பர் சாதிக் தலைமை வகித் தார். நகரச் செயலாளர் முஹமது சிக்கந்தர் வர வேற்றார். நிர்வாகிகள் ஷேக், அலாவுதின், நஜி முதின், அப்துல் காசிம், அப்துல் நாசர், ராஜா முஹமது மற்றும் பலர் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக் கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: