கிலானி மற்றும் மூவர் மீது குற்றச்சாட்டு பதிவு
புதுதில்லி: ஹவாலா பணப்பரிமாற் றங்களின் மூலமாக ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளுக்குப் பண உதவி செய்ததாக தீவிரவாத ஹுரியத் தலைவர் சையத் அலி ஷா கிலானி மற்றும் கிலானியின் நெருங் கிய உதவியாளர்கள் மூவர் மீது தில்லி நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்தது
.கிலானியின் நெருங்கிய உதவியாளர் குலாம் மொகமது பட், மொகமது சித்திக் கணாய், குலாம் ஜீலானி லிலூ மற்றும் பாரூக் அகமது தாக்கா ஆகியோர் தற் போது திகார் சிறையில் உள்ள இவர்கள் மீது மாவட்ட நீதிபதி ஹெச்.எஸ்.சர்மா சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தார்.குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றத்தின் தன்மை குறித்து விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று வாதிட்டனர்.
இவ்வழக்கின் விசாரணை ஏப்ரல் 16ம் தேதி துவங்கும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.பாகிஸ்தானிலிருந்து ஹவாலா மூலம் ரூ.4.57 கோடியைப் பெற்றதாக தேசியப் புலனாய்வு முகமை இந்நால்வரின் மீது குற்றம் சாட்டியுள்ளது.தற்போது சவூதி அரேபியாவில் வசித்து வரும் அய்ஜாஸ் மக்பூல் பட் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த மக்பூல் பண்டிட் மூலமாக பாகிஸ்தானிலிருந்து ஹவாலா மூலமாக பிரிவினைவாதிகளுக்கு பயங்கரவாதத் தைச் செயல்படுத்துவதற்காக பணப் பரிவர்த்தனை நடைபெற்றது என்று தேசிய புலனாய்வு முகமை தனது குற்றச் சாட்டில் தெரிவித்துள்ளது.
—————————–
500 ரயில் பெட்டிகளைக் கொள்முதல் செய்யும்
தில்லி மெட்ரோ ரயில் கழகம்
புதுதில்லி: தில்லி மெட்ரோ ரயில் கழகத்தின் (டிஎம்ஆர்சி) லட்சியத்திட்ட மான 3ம் கட்ட விரைவுத்தடத்திட்டத் திற்கு பல புதிய அம்சங்களுடன் கூடிய 500 ரயில் பெட்டிகளைக் கொள்முதல் செய் வதற்காக தில்லி மெட்ரோ ரயில் கழகம் ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்றுள்ளது. தற்போதுள்ள ரயில் பெட்டிகளை விடக் குறைந்த சத்தமுடையதாகவும், விரைவாகச் செல்லும் திறனுடைய தாகவும் உள்ள ரயில் பெட்டிகளைக் கொள்முதல் செய்ய டிஎம்ஆர்சி திட்ட மிட்டுள்ளது.
இதற்காக வடிவமைப்பு, உற்பத்தி, விநியோகம், சோதனை, நிறுவு தல் மற்றும் பயிற்சி அளித்தல் போன்ற அனைத்திற்காகவும் ஒப்பந்தப்புள்ளி வரவேற்கப்பட்டுள்ளது. முகுந்த்பூர்-யமுனா விஹார் தடம் எண் 7 மற்றும் ஜனக்புரி-மேற்கு காலிந்திகஞ்ச் தடம் எண் 8ல் ஒரு வண்டிக்கு 6 பெட்டி கள் வீதம் 81 விரைவு ரயில்களை விடுவ தற்கு டிஎம்ஆர்சி திட்டமிட்டுள்ளது.
——————————–
11 இந்திய மீனவர்கள் விடுதலை
மாலே: சர்வதேச எல்லையைக் கடந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 இந் திய மீனவர்களை மாலத்தீவு கடற்படை யினர் கைது செய்தனர். அவர்களை விடு விப்பதற்காக இந்தியத் தூதரகம் எடுத்துக் கொண்ட முயற்சிகளின் விளைவாக அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட் டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித் தனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரும் குல்ஹுதுப் ஃபுஷி தீவில் உள்ள ஹாதால் அடாலில் வைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் விடுவித்த மாலத்தீவு காவல்துறையினர் மீனவர்களைத் தூதரக அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இம்மீனவர்கள் இன்னும் இரண் டொருநாட்களில் இந்தியா வந்தடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசின் வேண்டுகோளுக் கிணங்க இம்மீனவர்கள் மீது வழக்கு எது வும் பதியப்படவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.
——————————
கோடை கால சிறப்பு ரயிலுக்காகக்
காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள்
கோவை: தமிழகத்தின் பிரபல சுற்றுலாத்தலமாகிய உதகமண்டலத்திற்கு கோடைகால சிறப்பு ரயில் சேவை எப் பொழுது துவக்கப்படும் என்று சுற்றுலாப் பயணிகள் ஆவலோடு உள்ளனர். மேட் டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குச் செல்லும் சிறப்பு ரயில் சேவையைப் பற்றி தென்னக ரயில்வே இன்னமும் தீர்மானிக்க வில்லை என்றே தெரிகிறது.சுற்றுலாப்பயணிகள் முன்கூட்டியே தங்களது பயணச்சீட்டுகளை முன் பதிவு செய்துகொள்வதற்காக தென்னக ரயில்வே சிறப்புரயில்கள் பற்றிய அறிவிப்பை வெளி யிடுவது வழக்கம்.
யுனெஸ்கோ பாரம்பரிய ரயில் மற்றும் நீல்கிரீஸ் மலை ரயில் போன் றவைகளுக்கு மிகுந்த கிராக்கியிருக்கும். மேட்டுப்பாளையத்திலிருந்து சுமார் 50கி.மீ. தொலைவிலுள்ள உதக மண்டலம் போய்ச் சேருவதற்கு கிட்டத் தட்ட 5 மணி நேரம் பிடிக்கு மென்றாலும் கண்ணைக் கவரும் இயற்கைக் காட்சி களைக் கண்டு களித்தவாறு அந்த ரயிலில் பிரயாணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் விரும்பு கிறார்கள்.இந்த ரயில்கள் அடிக் கடி பழுதாகி இடைவழியில் நின்றபோதிலும் சுற்று லாப் பயணிகள் அதைப் பொருட்படுத்து வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.