நாகப்பட்டினம், மார்ச் 3 –
தமிழ்நாடு ஊரக வளர்ச் சித்துறை அலுவலர் சங்கத்தி னர் ஏழு அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி வியாழக் கிழமை மாலை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். உதவி இயக்குநர் பதவி உயர்வு ஆணையை உடனே வெளியிட வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும்; பணி அமைப்பு விதிகளை உரு வாக்கி ஆணை வெளியிட வேண்டும், சாலை ஆய்வாளர் களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத் தில் வலியுறுத்தப்பட்டன.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் என்.சவுந் தரபாண்டியன் தலைமை தாங் கினார்.
மாவட்டச் செயலாளர் எஸ். ஜோதிமணி விளக்க வுரையாற்றினார். தோழமைச் சங்கத் தலைவர்கள் எஸ். அசோக்குமார், வி.சுந்தர வடி வேலு, கே.ராஜூ, ப. அந்துவன் சேரல், எம்.பி.குணசேகரன், எம்.ஜெயபால், எஸ்.மணி, சீனி. மணி, எம்.குருசாமி உள்ளிட்ட பலர் உரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.டி.அன் பழகன் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் ஆர். முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.புதுக்கோட்டைபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் எம்.சி. சக்திவேல் தலைமை வகித் தார்.கோரிக்கைகளை விளக்கி மாவட்ட துணைத் தலைவர் கள் தி.நடராஜன், எஸ்.பிரான் சிஸ், தணிக்கையாளர் பி.வசந் தன், வட்டார நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், அருள் முருகானந்தம், சுகுமாரன், சுப்பிரமணியன், கணேசன், குமார் உள்ளிட்டோர் பேசினர்.
தஞ்சாவூர்தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் கை. கோவிந்தராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் முல்லை வனம், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜு, மாவட்ட பொருளாளர் சடையப்பன், துணைத் தலைவர்கள் ராஜன், செல்வேந்திரன், இணைச் செயலாளர்கள் ரமேஷ், ஜெய பாலன் ஆகியோர் உரையாற் றினர். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.கோபால்சாமி, செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், மாவட்ட துணைத் தலைவர் எஸ். கோதண்டபாணி, வடக்கு வட் டத் தலைவர் தி.ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: