லக்னோ, மார்ச் 3-
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் 7வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை துவங்கி அமைதியான முறையில் நடைபெற்றது.60 சட்டப்பேரவை இடங்களுக்காக 10 மாவட்டங் களில் இத்தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது தேர்தல் நடைபெறும் 60 தொகுதிகளில் 30க்கும் மேற்பட்ட வையை கடந்த முறை பகுஜன்சமாஜ் கட்சி கைப்பற்றி இருந்தது. இறுதிக் கட்ட தேர்தலில் 962 வேட்பாளர் கள் களத்தில் இருந்தனர். மொத்தம் 1.82 கோடி வாக் காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.
கோவா
கோவா மாநிலத்தில் 40 சட்டப்பேரவை தொகுதி களுக்கும் ஒரே கட்டமாக சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.மர்கோவா தொகுதியில் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் திகம்பர் கமாத், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.இத்தேர்தலில் 80 விழுக்காடு வாக்குகள் பதிவாகும் என்று எதிர்க்கட்சித் தலைவரான மனோகர் பரிக்கார் கூறியுள்ளார். மார்ச் 6-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Leave A Reply

%d bloggers like this: