வாஷிங்டன், மார்ச் 3-
ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை கைவிடவில் லை என்றால் அந்நாட்டின் மீது ராணுவத்தாக்குதல் நடத்தப்படும் என்று அமெ ரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா பகிரங்கமாக மிரட் டல் விடுத்துள்ளார்.
வரலாறு காணா நெருக் கடியில் சிக்கியுள்ள ஏகாதி பத்திய முதலாளித்துவம், தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அடுத்தடுத்து போர்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது. லிபியாவைத்தாக்கி சிதைத் தழித்த அமெரிக்கா தலை மையிலான மேற்கத்திய சக்திகள் சிரியாவுக்கு குறி வைத்தன. அந்நாட்டில் தொடர்ந்து குழப்பத்தை விளைவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக் காவும், அரபு பிரதேசத்தில், அதன் கைக்கூலியாக செயல்படும் இஸ்ரேலும், ஈரான் மீது பெரும்போரை நடத்தி, அதன் மூலமாக வளைகுடா பிரதேசம் முழு வதையும் தனது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சித்து வருகின்றன.
உலகின் எண்ணெய்வளம் நிறைந்த இப்பிரதேசத்தை கைப்பற்றுவதன் மூலம், தனது பொருளாதாரத்தை பெட்ரோலியத்தை கொண்டு நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்ற எண் ணத்தோடு அடுத்தடுத்த முஸ்தீபுகளை அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது.கடந்த சில வாரங்களாக ஈரானுக்கு எதிரான தனது நடவடிக்கையை அமெரிக் கா தீவிரப்படுத்தியுள்ளது. அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஐ.நா. பாதுகாப் புக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தது.
இந்நிலை யில், ஈரான் தனது அணு சக்தி திட்டங்களைக் கை விடவில்லை என்றால், இறு தியாக ராணுவத்தாக்குதல் நடத்துவது என்ற திட்டம் தங்களிடம் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பகிரங்கமாக மிரட் டல் விடுத்துள்ளார். தி அட்லாண்டிக் எனும் ஏட்டிற்கு அவர் அளித்த பேட்டியிலேயே மேற்கண் டவாறு கூறியுள்ளார். ஈரான் அணுசக்தியைப் பயன்படுத் துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அணு ஆயுதத்தை உருவாக்க அந் நாட்டிற்கு உரிமையில்லை என்றும், இதை மீறினால் அமெரிக்கா தனது வலு வான கரங்களை வெளிப் படுத்தும் என்றும் ஒபாமா கூறியுள்ளார்.அதேநேரத்தில் ஈரா னைத் தாக்குவதற்கான சரி யான தருணம் கனிவதற்கு முன்பே, இஸ்ரேல் முன்கூட் டியே தாக்குதல் நடவடிக் கையை துவங்கி விடக்கூடாது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகு வை கேட்டுக் கொள்வதாக வும் ஒபாமா குறிப்பிட்டுள் ளார்.
ஈரான் அணுசக்தியை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த பொருளாதாரத் தடைகள் மூலமாகவும் ராஜீய ரீதியாகவும் முயற்சி கள் மேற்கொண்டதாகவும், அதற்கு அந்நாடு பணியாத பட்சத்தில் ராணுவ தாக்கு தலை மேற்கொள்வது என திட்டமிட்டிருப்பதாகவும் ஒபாமா கூறினார்.“ஈரானுக்கு இனியும் கருணை காட்ட முடியாது. ஈரானின் கூட்டாளியான சிரியாவைத்தான் நாங்கள் குறிவைத்திருந்தோம். ஆனால் ஈரானும் உடனடி யாக பலியாக விரும்பும் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை” என்று ஒபாமா போர்வெறியோடு கொக் கரித்துள்ளார். மேலும், “இந்த உலகின் மிகவும் முக்கியமான பிரதே சத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.
அணு ஆயுதம் வைத்துக் கொள்ள ஈரானை அனும தித்தால் மற்ற நாடுகளும் அதே பாதையில் செல்லும். இது எந்தவிதத்திலும் சகித் துக்கொள்ளக்கூடியது அல்ல. எனவே ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதியில்லை. அந்நாடு பயங்கரவாத அமைப்பு களுக்கு உதவி செய்து வரு கிறது. எனவே உலகமே ஈரா னால் அச்சுறுத்தலுக்கு உள் ளாகியிருக்கிறது” என்று தனது போர்வெறியை ஒபாமா நியாயப்படுத்தியுள் ளார்.

Leave A Reply

%d bloggers like this: