திருவாரூர், மார்ச் 3-
தமிழ்நாடு சுகாதார மேம்பாடு திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் இலவச அமரர் ஊர்தி சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் திருவா ரூர் மாவட்டக் கிளை சார் பில் செயல்படுத்தப்படும் இந்த சேவையை மாவட்ட ஆட்சியர் சி.நடராசன் துவக்கி வைத்து அமரர் ஊர்திக் கான சாவியை ரெட்கிராஸ் சொசைட்டியின் செயலா ளர் ஜே.வரதராஜனிடம் ஒப் படைத்தார்.மாவட்ட ஆட்சியர் பேசுகையில், திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஒரு அரசு மருத்துவமனையில் இறப்பு ஏற்பட்டாலும் இறந் தவருடைய உடல் சொந்த ஊருக்கு இலவசமாக அம ரர் ஊர்தி மூலமாக கொண்டு சேர்க்கப்படும். இதற்காக பொதுமக்கள் எந்த தொகையும் செலுத்த வேண் டியதில்லை. இது முற்றிலும் இலவச சேவை. இந்த சேவை தேவைப்படுபவர் கள் “155377” என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன டையலாம் என்று கூறினார்.நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சின்னப்பன், 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையின் திட்ட ஒருங்கிணைப்பா ளர் ஆர்.பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: