இலங்கையில் ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போரின் கடைசிக் கட்டத்தில் ராணுவத்தினரின் தாக்குதலால் இலங்கைத் தமிழர்களுக்கு கடுமையான பாதிப்புகளும் சொல்லொண்ணா துயரங்களும் ஏற்பட்டன. ராணுவத்தினரின் பரவலான குண்டுவீச்சினால் இலங் கையில் அப்பாவித் தமிழ்மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டனர்.
மருத்துவமனைகள் கூட ராணுவத்தினரின் வான்வழித்தாக்குதலில் தப்பவில்லை. செஞ் சிலுவைச் சங்கம் போன்ற மனிதநேய அமைப்புகள் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்ய முனைந்தபோது தடுக்கப்பட்டனர். மனிதஉரிமைகள் மீறப்பட்டன. போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. ஊடகங்கள் மற்றும் அரசை விமர்சித்தவர் கள் தாக்கப்பட்டார்கள் என்று ஐ.நா. சபையால் அமைக்கப்பட்ட மூவர் குழு தனது அறிக்கையில் கூறி யுள்ளது. உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தவுடன் இலங்கை ஜனாதி பதி ராஜபக்சே, அந்த நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது, தமிழ்மக்களும் என்தேசத்து மக்கள்தான், அவர்களுடைய தேவை என்ன என்பதை நான் அறிவேன் என்றார்.
ஆனால் அவருடைய வார்த்தைகளுக்கு அவரே விசுவாசமாக இல்லை என்பதையே கடந்த மூன்றாண்டு கால அனுபவம் உணர்த்துகிறது.இலங்கையில் இறுதிக்கட்டப்போர் 2009ம் ஆண்டு மே 19ம்தேதி முடிவுக்கு வந்ததைத்தொடர்ந்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்குச் சென்று அரசு விமானத்தில் போர் நடந்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் ராஜபக்ஷேவையும் அவர் சந்தித்தார். கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று பான் கி மூனும் ஒத்துக் கொண்டார். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக அந்நாட்டு அரசுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் 11 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
ஆனால் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழ் மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கை களை ஒரு சாசனமாக எழுதித்தருமாறு அரசு கேட்டுக்கொண் டது. இத்தகைய ஒரு விரிவான கோரிக்கை சாசனத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசிடம் அளித்துள்ளது. ஆனால்

Leave A Reply