துபாய் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதன் இரட்டையர் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மகேஷ் பூபதி – ரோகன் போபண்ணா இணை 7-6(2), 7-6(7), என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் ஜூலியன் நோலே – அலெக்சாண்டரின் இணையை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு முன்னேறியது. ஒற்றையர் அரை இறுதியில் 4-ம் நிலை வீரர் இங்கிலாந்தின் ஆன்டிமுர்ரே 6-2, 7-5, என்ற நேர் செட்டில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச்சை தோற்கடித்து அதிர்ச்சி அளித்தார். அவர் இறுதியாட்டத்தில் மற்றொரு முன்னணி ஆட்டக்காரரான ரோஜர் பெடரரை சந்திப்பார்.

Leave a Reply

You must be logged in to post a comment.