முத்தரப்பு கிரிக்கெட்டில் பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றது. இலங்கை அணி தோற்றால் இறுதியாட்டத்திற்குள் செல்லலாம் என்று காத்திருந்த இந்தியஅணி போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டது.காமன்வெல்த் பேங்க் கோப்பைக்கான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மெல்பேர்ன் நகரில் நடந்த இறுதி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-
இலங்கை அணிகள் விளையாடின.டாஸ் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ஜெயவர்த்தனே, தில்ஷன், இந்த முறை ஏமாற்றினாலும், சங்ககாராவும், தினேஷ் சன்டிமாலும் அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். இருவரும் அரைசதத்தைதாண்டி விளையாடியபோது, அந்த அணி 280 ரன்கள் வரை நெருங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த அணி 50 ஓவர்களில் 238 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் பேட்டின்சன் 4 விக்கெட்டுகளும், டேனியல் கிறிஸ்டியன் 5 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் 229 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. டேவிட் ஹஸ்சி கடைசியாக ஆட்டமிழந்தார். அவர் ஆஸ்திரேலியாவை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு சக ஆட்டக்காரர்களிடம் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இலங்கை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. இலங்கை வீரர் சன்டிமால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Leave A Reply