புதுதில்லி, மார்ச் 3 –
இந்தியாவில் அமெரிக்க அதிரடிப்படைகள் முகாமிட் டுள்ளன என்று அமெரிக்க ராணுவ தலைமையிடமே அதி காரப்பூர்வமாக கூறியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு நாட்டு மக்களுக்கு உண்மைகளை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனக்குரல் எழுப்பி யுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு மார்ச் 3 சனிக்கிழமை வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:அமெரிக்க ராணுவத்தின் மூத்த உயர் அதிகாரியும், பசிபிக் கமாண்ட் பிரிவின் கமாண்டரு மான அட்மிரல் ராபர்ட் வில் லார்டு, அமெரிக்க நாடாளுமன் றக் குழுவின் முன்பு, நேபாளம், வங்கதேசம், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளோடு இந்தியாவிலும் அமெரிக்க சிறப்பு அதிரடிப்படை துணைக் குழுக்கள் முகாமிட்டிருக்கின் றன என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சக மும் பாதுகாப்புத்துறை அமைச்சகமும் மறுத்துள்ளன. அமெரிக்காவின் எந்தவொரு படைப்பிரிவினரும் இந்தியா வில் இல்லை என்று மறுக்கப் பட்டுள்ளது. இத்தகைய மறுப்பே அடுத்தடுத்த கேள்வி களை எழுப்பியுள்ளது.அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் பிரிவு கமாண்டர் தனது கருத்தை உறுதிபட தெரிவித் திருக்கிறார்.“நாங்கள் எங்களது சிறப்பு அதிரடிப்படை துணைக்குழுக் களை – பசிபிக் துணைக்குழுக் கள் என்பது அதன் பெயர் – நேபாளம், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளில் இந்தியாவைப் போலவே முகாமிடச் செய் திருக்கிறோம்” என்று அவர் கூறியிருக்கிறார்.
அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் பிரிவு கமாண்ட்டின் வளையத்திற்குள் இந்தியாவும் விழுந்திருக்கிறது என்பதை இது தெளிவாக காட்டுகிறது. அமெரிக்க நாடாளுமன்ற குழு வின் முன்பு அந்நாட்டு பசிபிக் கமாண்ட் பிரிவின் தளபதி அதிகாரப்பூர்வமான முறையில் இதை தெரிவித்திருக்கிறார்.இந்த தகவல் தவறானது என்று எந்தவொரு விளக்கமும் அமெரிக்கத் தரப்பிலும் இது வரை வரவில்லை.அமெரிக்காவுடனான இத்தகைய எந்தவொரு ஏற்பாட் டிலும் இறங்கியிருப்பது குறித்து இந்நாட்டிற்கும் இந்த மக்களுக்கும் காங்கிரஸ் தலை மையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எவ்விதத் தக வலையும் தெரிவிக்கவில்லை.
உதாரணத்திற்கு அதே குழுவின் முன்பு அட்மிரல் வில்லார்டு மேலும் இப்படி கூறியிருக் கிறார் : “நாங்கள் இந்தியாவோடு மிகவும் நெருக்கமானமுறையில் பணியாற்றி வருகிறோம். பயங் கரவாத எதிர்ப்பு நடவடிக்கை களில் அவர்களது திறன்களை மேம்படுத்துவது தொடர்பாக வும், குறிப்பாக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்புத்திற னை மேம்படுத்துவது தொடர் பாக பணியாற்றி வருகிறோம். இரு அரசுகளுக்கு இடையிலும் நெருக்கமான முறையில் பணி யாற்றுகிறோம். அவர்களது உள்நாட்டில் பயங்கரவாத தடுப்பு மற்றும் ஊடுருவல் தடுப்பு சவால்களை எதிர் கொள்ள பாதுகாப்புத்துறை மட்டுமின்றி இதர பல ஏஜென் சிகளுக்கும் உதவுகிறோம்”.இத்தகைய பின்னணியில், அமெரிக்காவுடனான நேரடி மற்றும் மறைமுக ராணுவ பாது காப்பு உறவுகள் குறித்த முழு விபரத்தையும் நாட்டு மக்க ளுக்கு அரசு தெரிவிக்க வேண் டும்; இது விஷயத்தில் அரசு தனது நிலையை தெளிவு படுத்தவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.