தஞ்சாவூர், மார்ச் 3
-தஞ்சாவூர் மாவட்ட வங்கியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது, தஞ்சை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் உத வித்தொகைகள் வரும் ஏப்ரல் 1ம்தேதிமுதல் பயனா ளிகளுக்கு பயோ மெட்ரிக் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் வழங் கப்பட வேண்டும் என்றார்.வங்கிகள் இல்லாத பகுதிகளில் வங்கி பணியாளர்கள் மூலமாகவும், வங்கி கிளைகள் உள்ள பகுதிகளில் பய னாளிகள் வங்கி கணக்குகள் துவங்குவதற்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதற்கு அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும், கல்விக்கடன், பயிர்க்கடன், சுயவேலை வாய்ப்பிற் கான கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் வழங்குவதற்கு வங்கிகள் முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வரதராஜன் மற்றும் வங்கி அலுவலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply