சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், பால் மற்றும் உணவு தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில், தனது சுயசார்பை இந்தியா இழந்து கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தப் பொருட்களை இறக்குமதி செய்ததன் மதிப்பு 75 ஆயிரத்து 948 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 52 ஆயிரத்து 492 கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதியாகியிருந்தது. இரண்டு காலகட்டத்தை ஒப்பிட்டால் 44.7 சதவிகிதம் அளவிற்கு இறக்குமதி அதிகரித்துள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிக்கையில் இந்தப் புள்ளிவிபரங்கள் இடம் பெற்றுள்ளன. சமையல் எண்ணெய் விஷயத்தில்தான் இந்தியா வெளிநாடுகளை பெரிய அளவில் சார்ந்திருக்கிறது. தேவையில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகிறது. உலகிலேயே இந்தியாதான் அதிக அளவில் சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இதில் மட்டும் 67 சதவிகிதம் இறக்குமதி அதிகமாகியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியில் சமையல் எண்ணெய்யின் பங்கு மட்டும் 46 சதவிகிதமாகும்.

Leave A Reply

%d bloggers like this: